Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், கதிரும் ராஜியும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது மனைவிக்கு எந்தவித அவமானமும் வந்து விடக்கூடாது. ராஜியின் படிப்பு செலவை நாம் மொத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்பான கணவராக கதிர் மாறிவிட்டார்.
அந்த வகையில் சாப்பாடு டெலிவர் பண்ணும் வேலையை பார்ட் டைம் வேலையாக பார்க்கப் போகிறார். இதற்கிடையில் கிடைத்த டிரைவர் வேலையும் விடாமல் அதன் மூலமாகவும் வேலை பார்த்து 2000 ரூபாயை சம்பாதித்து விட்டார்.
சம்பாதித்த பணத்துடன் வீட்டிற்கு வந்து ரெஸ்ட் எடுக்க போகும் கதிர், ராஜிடம் இனி உனக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் கேளு. என் அம்மா அப்பா கிட்ட போய் நிற்காத என்று மனைவி மீது அக்கறையாக இருக்கும் அன்பான கணவராக கதிர் பேசிய வார்த்தைகள் பார்ப்பதற்கே மனதிற்கு இதமாக இருந்தது.
ஆனாலும் வீம்பு பிடித்த ராஜி பணத்தை எடுக்காமல் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். உடனே கதிர் அப்படி என்றால் காலேஜுக்கு எப்படி போவாய். நேற்று மாதிரி நடந்து போவியா என்று கேட்கிறார். அதற்கு ராஜி எதுவும் பேசாமல் காலேஜுக்கு நடந்து போகிறார்.
ஆனால் போகும்போது நாய் பயத்தில் வீட்டிற்கு வந்து விடுகிறார். உடனே கதிர் இப்பொழுதாவது நாய் தான் துரத்துகிறது. சாயங்காலம் என்றால் பேயை துரத்தும் என்று ராஜியை சீண்டிப் அந்த பணத்தை எடுக்க வைத்து விடுகிறார். ஆக மொத்தத்தில் இருவரும் மனசுமே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.
வில்லியாக வரப்போகும் கேரக்டர்
அதிலும் எப்பொழுதுமே ராஜியை கண்டால் வெறுப்பாய் பார்த்து வந்த கதிர் மனசுக்குள் காதல் வர ஆரம்பித்து விட்டது. இதனை அடுத்து சரவணனுக்கு மனைவியாக கல்யாணம் வைபோகம் மூலம் சரண்யாவை பெண் பார்த்து விட்டார்கள். ஆனால் சரண்யா குடும்பத்தில் ஏதோ ஒரு குளறுபடி இருக்கிறது என்று தெரிகிறது.
அதை மறைத்து தான் பாண்டியன் குடும்பத்துக்கு மருமகளாக தள்ளப் போகிறார்கள். அதே நேரத்தில் சரணியாவின் முகமும் சரியில்லை ஏதோ ஒரு பிளான் பண்ணுகிறார். ஒருவேளை இந்த கூட்டு குடும்பம் அவருக்கு செட்டாகாமல் போகப் போகிறது.
அத்துடன் இந்த குடும்பத்திற்கு வில்லியாகவும், சரவணனை பாண்டியனிடமிருந்து பிரித்து கூட்டிப் போகும் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் தான் இவருடைய கதாபாத்திரம் அமையப் போகிறது. அப்படி மட்டும் சரண்யாவின் நடவடிக்கை இருந்தது என்றால் பாண்டியன் பார்த்து வைத்த மருமகள் மூலம் படாத கஷ்டத்தை படப் போகிறார்.