ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சர்வதேச அளவில் மார்க்கெட்டை பிடிக்க ராஜமௌலி போட்ட திட்டம்.. 83 கோடி செலவு செய்த ஷாக்கிங் ரிப்போர்ட்

பிரம்மாண்ட இயக்குனர் என புகழ்பெற்ற ராஜமௌலி பாகுபலி என்ற திரைப்படத்தால் உலகம் முழுவதும் பிரபலமானார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் கோடி கணக்கில் லாபத்தை வாரி குவித்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

அதனாலேயே இப்படம் உலக அளவில் கவனம் பெற்று பல விருதுகளையும் தட்டி தூக்கியது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்காக ஹாலிவுட்டில் பெருமை மிக்க விருதாக பார்க்கப்படும் கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது. அதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் இப்படம் இன்னும் பல ஹாலிவுட் விருதுகளையும் வாங்கி குவித்தது.

Also read: இந்தியளவில் ராஜமௌலி மனதை வென்ற 5 படங்கள்.. தனுஷின் வெற்றி இயக்குனருக்கு கிடைத்த புகழாரம்

அதை தொடர்ந்து தற்போது ஆஸ்கர் நாமினேஷனிலும் இப்படம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. எப்படியும் இந்த விருதை வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் தற்போது அவர் ஹாலிவுட்டிலேயே டென்ட் போட்டிருக்கிறார். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்காக இப்படத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுப்பவில்லையாம். ராஜமௌலி தான் தனிப்பட்ட முறையில் இப்படத்தை அனுப்பி இருக்கிறார்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் சர்வதேச அளவில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக 83 கோடி வரை செலவு செய்திருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக ராஜமவுலி பிரமோஷன் உள்ளிட்டவைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார். மேலும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோருடன் பல இடங்களுக்கும் சென்று இப்படத்தை விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

Also read: பிரம்மாண்டத்தில் ராஜமௌலி,ஷங்கரையே ஓரங்கட்டிய தில் ராஜ்.. தலை சுற்ற வைக்கும் வாரிசு படத்தின் வீட்டு பட்ஜெட்

அதில் ஹீரோக்களுக்கு மட்டுமே தனியாக ஒரு பெரிய அமௌன்ட் வழங்கப்பட்டதாம். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு விருதுகளை பெற வேண்டும் என்பதற்காகவும் இவர் தனிப்பட்ட முறையில் செலவு செய்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே காரணம் ராஜமவுலி என்றால் உலகம் முழுவதும் தெரிய வேண்டும் என்பதுதான். அதற்காக இத்தனை கோடி செலவு செய்வதெல்லாம் ரொம்பவும் ஓவர் என்று பலருக்கும் தோன்றலாம். அதில் தான் அவரின் ராஜதந்திரம் இருக்கிறது.

அதாவது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் 83 கோடி செலவு செய்து அவர் பல ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த சர்வதேச விருதுகளை பெற்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டால் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் ராஜமவுலியின் படம் என்றாலே வியாபாரமும் பல மடங்காகும் என்று திட்டம் போட்டு தான் அவர் இப்படி எல்லாம் செலவு செய்கிறாராம். இதுதான் தற்போது திரையுலகில் ஆச்சரியம் கலந்த செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Also read: உலக அரங்கில் வெற்றியை பதித்த ராஜமௌலி.. சரித்திரம் படைத்த ஆர்ஆர்ஆர்

- Advertisement -

Trending News