விவாகரத்து வதந்தியால் ரூட்டை மாற்றிய ராஜா ராணி-2.. ஆனாலும் பில்டப் ஓவராதான் இருக்கு

ரொம்ப நாளா ப்ரோமோ இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த சீரியல் விஜய் டிவில வர்ற ராஜா ராணி-2 சீரியல். காரணம் என்னன்னா ப்ரோமோல போடுற அளவுக்கு சீரியல்ல கதையே கிடையாது. ரொம்ப நாளா அதுல நடக்கிற ஒரே கதை ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் தான்.

கிடைக்கிற எல்லா இடத்துலயும் சம்மந்தம் இல்லாம இந்த ஜோடி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே திரியுது. வீட்ல, தெருவுல, கடையில இப்படி எல்லா இடத்துலயும் உரசுவது, கைய பிடிக்கிறதுன்னு இருக்காங்க இந்த ஜோடி.

இது எல்லாத்துக்கும் மேல பர்த்டே பார்ட்டிக்கு போன வீட்டில கூட கதவை மூடிக்கொண்டு ரகசியம் பேசினாங்க. இதுல ஆடி மாசம் எப்ப முடியும்னு ஒரு கவலை வேற. இதெல்லாம் பார்த்த ரசிகர்கள் எப்பா டேய் முடியலப்பா ன்னு வெளிப்படையாகவே கதற ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த அளவுக்கு டைரக்டர் அரைச்ச மாவையே அரைத்து ரொம்ப புளிக்க வச்சிட்டாரு. ஒரு வழியா ரசிகர்களோட கதறல் காதில் விழுந்ததோ என்னவோ கதை இப்ப அடுத்த டிராக்கிற்கு போகுது.

நம்ம ஹீரோ சரவணன் சமையல் போட்டிக்காக சென்னை போகப் போறாரு. இதற்குக் காரணம் நம்ம சந்தியா. இத நெனச்சு பூரிப்புல இருந்த மாமியார் கிட்ட சந்தியா உங்க புள்ளைய பத்திரமா கொண்டு வந்து சேர்க்குரேன்னு சொல்றாங்க.

என்னமோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது போன்று ஓவர் பில்டப் செய்வது ரசிகர்களுக்கு கேலிக் கூத்தாகி விட்டது. ஒரு வழியா சரவணன் சென்னைக்கு போக வீட்ல எல்லாரும் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒருவேளை சரவணன் போட்டியில ஜெயிக்காமல் போனால் சந்தியா தலையை உருட்ட மாமியார் சிவகாமி ரெடியா இருப்பாங்க.

raja-rani-2
raja-rani-2

கொஞ்ச நாளா ஆல்யா, சஞ்சீவ் விவாகரத்துன்னு வந்த செய்தியால எங்க முதலுக்கே மோசம் ஆகிடுமோன்னு டைரக்டர் ரொமான்ஸ் ஏரியாவில் இருந்து கதைக்கு திரும்பிட்டாரு போல. எப்படியோ சீரியல் நல்லா இருந்தா சரிதான். சென்னைக்கு போற இந்த ஜோடி அங்கேயும் போயி ரொமான்ஸ் பண்ணாம இருந்தால் போதும்னு ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்