எக்ஸாம் எழுதாமல் போலீஸ் ஆகும் சந்தியா.. ராஜா ராணி 2 இயக்குனரின் அடுத்த உருட்டு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலின் இந்த வார எபிசோட் காண ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சென்னையில் நடக்கும் சமையல் போட்டிக்காக சரவணன் மற்றும் சந்தியா இருவரும் செல்கின்றனர்.

அப்பொழுது இருவரும் ஒரு கடையில் ஜூஸ் குடித்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வரும் ஒரு கார் அங்கு இருந்த குழந்தையின் மீது மோதி விட்டு சென்று விடுகிறது.

உடனே சரவணன் குழந்தையை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் சந்தியா மருத்துவமனைக்கு செல்லாமல் இடித்து விட்டு சென்ற காரை தேடி வேறு ஒரு ஆட்டோவில் புறப்படுகிறார்.

அந்தக் கார் சென்ற இடத்தை கண்டு பிடித்த சந்தியா உடனே சரவணனுக்கு ஃபோன் செய்து போலீஸ் உடன் வருமாறு கூறுகிறார். பின்னர் ஓவர் கான்ஃபிடன்ஸில் முந்திரி கொட்டை தனமாக அந்த வீட்டு கதவை தட்டுகிறார்.

அப்போது அந்த வீட்டில் இருந்து சில ரவுடிகள் வெளிவருகின்றனர். சந்தியா அவர்களுடன் சண்டையிடும்போது சரவணன் போலீசுடன் வீட்டிற்கு வருகிறார். உடனே போலீசார் அங்கிருந்த ரவுடிகள் அனைவரையும் அரெஸ்ட் செய்கின்றனர்.

இதற்காக சந்தியாவை, கமிஷனர் போன் செய்து பாராட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் போலீசில் இருக்க வேண்டிய ஆள், எப்பொழுது வேலையில் ஜாயின் பண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் சந்தியா, காக்கி சட்டையுடன் ரவுடிகளை துவம்சம் செய்வது போன்ற காட்சியுடன் ப்ரோமோ முடிகிறது.

நம் நாட்டில் எவ்வளவு திறமை இருந்தும் போலீஸ் வேலை கிடைக்காமல் அல்லாடும் பல பேர் உள்ளனர். ஆனால் இந்த மாதிரி கதையில் மட்டும் தான் எக்ஸாம் இல்லாமல் போலீஸ் ஆகிவிடுகின்றனர். என்னதான் கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டைரக்டர் சார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்