வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

காவிரியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்ண போகும் ராகினி.. மாட்டிக்கொண்டு தவிக்கப் போகும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியை காதலித்ததை தவிர நவீன் வேறு எந்த தப்பும் பண்ணவில்லை. காவேரிக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் யமுனாவின் கனவை நிறைவேற்றும் விதமாக கூடவே இருந்து நம்பிக்கை கொடுத்து பேசி வந்தார். ஆனால் இதை தவறாக புரிந்து கொண்ட யமுனா, நவீனுக்காக பல சூழ்ச்சிகளை பண்ணி கடைசியில் நவீன் கையால் தாலி கட்டிக் கொண்டார்.

இதற்கு மிகவும் உடந்தையாக இருந்து கல்யாணத்தை பண்ணி வைத்தது காவிரி மற்றும் விஜய் தான். ஆனாலும் நவீன் தன்னுடைய கேரக்டரை விட்டு கொஞ்சம் கூட நகராமல் யமுனா மீது கொஞ்சம் அக்கறையுடன் தான் நடந்து கொள்கிறார். அதே மாதிரி காவேரி மற்றும் விஜய் இதற்கு அப்புறம் நம்முடைய வாழ்க்கையில் யாரும் வந்து தலையிட மாட்டார்கள் என்பதற்கு ஏற்ப அவர்களுடைய சந்தோசமான வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

அதன்படி விஜய், காவிரி மீது மொத்த அன்பையும் காட்டும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக சர்ப்ரைஸ் பண்ணி தன்னுடைய காதலை சொல்ல முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் காவிரியின் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக ஒரு வீட்டை பரிசாக கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தலாம் என முடிவெடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் இதை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக ராகினி, அஜய் மூலம் வெண்ணிலாவை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ராகினியின் அப்பா பசுபதி, காவேரியின் பிறந்தநாளுக்கு விஜய் பரிசு கொடுப்பதற்கு முன் நாம் விஜய்க்கு மிகப்பெரிய பரிசாக வெண்ணிலாவை கண்டுபிடித்து கண் முன் கொண்டு போய் நிப்பாட்ட வேண்டும் என்று பிளான் பண்ணி இருக்கிறார்.

அதனால் காவிரியின் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான விஷயங்கள் என்னவென்றால் வெண்ணிலா, விஜய் வீட்டுக்கு வந்து விடுவார். என்னதான் விஜய் மனதில் காவிரி இருந்தாலும் வெண்ணிலாவின் தற்போதைய நிலைமையை பார்த்த விஜய்க்கு நிச்சயம் மனதில் ஒரு மனிதாபிமானத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் வெண்ணிலாவை தானே பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு நல்லபடியாக குணப்படுத்த வேண்டும் என்று விஜய் முடிவெடுக்க போகிறார்.

ஆனால் காவேரி, விஜய் மனதில் வெண்ணிலா தான் இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு விஜய் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க முயற்சி எடுப்பார். ஆனால் என்ன ஆனாலும் விஜய், காவிரியை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதனால் வெண்ணிலா வந்த பிறகு ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டு விஜய் தவிக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News