தடுக்கி விழுந்த 5 நடிகர்களை தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்.. வில்லனாய் தெறிக்கவிட்ட ரகுவரன்

SuperStar: தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவர் சிபாரிசு செய்து, கேரியரில் கொடிக்கட்டி பறக்க செய்த 5 பிரபலங்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

வடிவேலு: ஏழ்மை நிலையில் இருந்து தன் திறமைக்கேற்ற வாய்ப்பை தேடி அலைந்து, அதன்பின் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராய் வலம் வந்தார். அவ்வாறு தன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இவரை சந்திரமுகி படத்தில் நகைச்சுவைக்காக சிபாரிசு செய்துள்ளார் ரஜினி. அதைத்தொடர்ந்து தான் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் இப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.

Also Read: நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

நவரச நாயகன் கார்த்திக்: எதார்த்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவரின் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றி கண்டிருக்கிறது. அவ்வாறு இருக்க, ஒரு காலகட்டத்திற்கு பிறகு பட வாய்ப்பு குறைந்து காணப்பட்ட இவரை நல்லவனுக்கு நல்லவன் என்னும் படத்தில் வினோத் கதாபாத்திரம் ஏற்று நடிக்க உதவினாராம்.

பிரபு: தன் தந்தையை பார்த்து, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் பிரபு. இவர் நடித்த எண்ணற்ற படங்களில் அறுவடை நாள், அக்னி நட்சத்திரம், சின்னத்தம்பி, டூயட் போன்ற படங்கள் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அவ்வாறு இருக்க, ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு தந்து உதவினாராம்.

Also Read: நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாகவே சுற்றி திரியும் 6 நடிகர்கள்.. முன்னணி ஹீரோயின்களை கழட்டிவிட்ட சித்தார்த்

ரகுவரன்: ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் பாட்ஷாவும் ஒன்று. இப்படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினி மட்டும் அல்ல, வில்லத்தனத்தில் அசத்திய ரகுவரனும் தான் காரணம். இவர் கதாநாயகனாக ஏற்ற படங்களை விட, வில்லனாய் நடித்த படங்களே வெற்றி கண்டிருக்கிறது. அவ்வாறு பாட்ஷா படத்தில் ரகுவரனை வில்லனாக நடிக்க ரஜினி தான் ஒப்புக்கொண்டாராம்.

கே எஸ் ரவிக்குமார்: முழு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாய் இவர் இயக்கும் படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்திருக்கிறது. அதிலும் ரஜினி நடிப்பில் இவர் மேற்கொண்ட படம் தான் முத்து மற்றும் படையப்பா. முத்து படத்துக்கு கிடைத்த வெற்றியை கொண்டு, அதேபோல் ஃபேமிலி சப்ஜெக்ட் படம் எடுக்க வேண்டும் என கே எஸ் ரவிக்குமாரை, ரஜினி கேட்டுக் கொண்டாராம். அதைத்தொடர்ந்து இப்படம் இவர்கள் கூட்டணியில் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: சீரியல் நடிகை என ஒதுக்கிய ஹீரோக்கள்.. தேடி வர வைத்து முகத்தில் கரியை பூசிய வாணி போஜன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்