லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலுவின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 200 நாட்களை கடந்து ஓடிய இத்திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைக்கப்பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு தற்போது சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இத்திரைப்படத்தில் ஹீரோவாகவும், ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட 5 ஹீரோயின்கள் கமிட்டாகியுள்ளனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read : கையெடுத்து கும்பிடும் ராகவா லாரன்ஸ்.. பெட்டி பெட்டியாக கல்லா கட்டியதால் வைக்கும் வேண்டுகோள்

இதனிடையே சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்த் டாக்டராக ஒரு கதாபாத்திரத்திலும், வேட்டையன் மன்னன் என்ற மற்றொரு கதாபாத்திரம் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ரஜினிகாந்தின் வேட்டையன் மன்னன் கதாபாத்திரம் இன்று வரை பிரபலமானது

ரஜினிகாந்த் கூறும் லக லக லக லக என்ற டயலாக்கு பட்டித்தொட்டி எங்கும் இன்றுவரை ரசிகர்கள் அதிகம் எனலாம். இதனிடையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதையாக வேட்டையன் மன்னன் எப்படிப்பட்டவர் அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி சந்திரமுகி 2 படத்தில் எடுத்து வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Also Read : காரை துடைத்து, சாப்பாடு பரிமாறிய ராகவா லாரன்ஸ்.. பல அவமானங்களுக்கு பின் ரஜினி கொடுத்த வாழ்க்கை

இதில் வேட்டையன் மன்னனாக நடிகர் ராகவா லாரன்ஸ் பின்னி எடுத்து வருகிறாராம். மேலும் சந்திரமுகி எப்படி வேட்டையன் மன்னனுக்கு அறிமுகமாகிறார், வேட்டை மன்னன் சந்திரமுகியை எப்படி கொல்கிறார். சந்திரமுகியின் காதல் கதை என்ன உள்ளிட்ட கதைக்களமாக பி.வாசு இத்திரைப்படத்தை இயக்கி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பேய் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ், வேட்டையன் மன்னனாக முதன் முதலில் ராஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் யாரு சந்திரமுகியாக நடிக்கிறார் என்பது சஸ்பேன்ஸ்சாகத்தான் உள்ளது. இருந்தாலும் ஜோதிகாவின் நடிப்பை முறியடிக்கும் அளவிற்கு கதாபாத்திரம் அமைய வேண்டும் என்பதே சந்திரமுகி 2 படக்குழுவின் முயற்சியாக உள்ளது.

Also Read : லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்.. ஓபன் ஆக சொன்ன ராகவா லாரன்ஸ்

- Advertisement -