கேப்டன் மகன் என்னோட பொறுப்பு.. கொடுத்த வாக்கை மீண்டும் காப்பாற்றும் லாரன்ஸ் மாஸ்டர்

Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது. அதையடுத்து இப்போது அவர் அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க மாற்றம் என்ற அமைப்பை தொடங்கி பல உதவிகளையும் செய்து வருகிறார்.

எப்போதுமே மற்றவர்களுக்காக உதவி செய்ய ஓடி வருவதில் இவருக்கு நிகர் இவர்தான். அப்படித்தான் சமீபத்தில் கேப்டன் இறந்தபோது அவருடைய மகன் என்னுடைய பொறுப்பு. அவர் சினிமாவில் வளர்வதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

அவர் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோல், ஒரு பாடலுக்கு ஆடுவது, டபுள் ஹீரோ சப்ஜெக்ட் எதுவாக இருந்தாலும் என்னை அணுகலாம் என வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் இவர் ஒரு கேமியோ ரோலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சண்முக பாண்டியன் உடன் இணையும் லாரன்ஸ்

இது ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் லாரன்ஸ் மாஸ்டர் அதோடு நிற்கவில்லை. கொடுத்த வாக்கை சரியாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

இன்னும் படைத்தலைவன் படமே வெளிவராத நிலையில் இவர்களின் அடுத்த கூட்டணி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளார்.

இரண்டு ஹீரோ கதையாக உருவாகும் இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக லாரன்ஸ் நடிக்க சம்மதித்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். ஊருக்கு முன் வாக்கு கொடுத்துவிட்டு அதை அப்புறம் பல நடிகர்கள் மறந்து விடுவார்கள். அப்படி இல்லாமல் ராகவா மாஸ்டர் கேப்டன் மகனுக்காக செய்த இந்த விஷயம் வரவேற்கப்படுகிறது.

கேப்டன் மகனுக்காக ஓடிவந்த ராகவா மாஸ்டர்

Next Story

- Advertisement -