புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நிஜமான வில்லியாக மாறிய கோபியின் அம்மா.. ராதிகா நல்லது செஞ்சும் பிரயோஜனமில்லை

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கதையே இல்லாமல் உருட்டுவதற்கு மற்ற சீரியல்களில் இருந்து அதே கான்செப்டை எடுத்து ஜெனி மாசமா இருக்கும்போது படியிலிருந்து கீழே விழுவது போல் கதையை இந்த வாரம் நகர்த்தி வருகிறார்கள். அப்பொழுது ராதிகாவை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லாததால் ஜெனி மிகவும் பயத்துடன் இருக்கிறார்.

அப்பொழுது ராதிகா, ஜெனி இடம் நீ இதை நினைத்து பயப்படாதே நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார். அதை போல் ஜெனியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகிறார். அங்கே செக்கப் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவருக்கு பிரச்சனை ஏதுமில்லை நீங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொன்னதற்கு பிறகு ராதிகா, பாக்கியாவிற்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னதும் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

இதற்கு அடுத்து செழியனும் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெனியை பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணி மன்னிச்சிடு நான் சரியா உன்னை கவனிக்கல. இனிமேல் அந்த மாதிரி தவறு நடக்காது என்று சொல்கிறார். அடுத்து இவங்க எல்லாம் வந்ததுக்கு பிறகு ராதிகா யாரிடம் சொல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி போய் விடுகிறார். அடுத்ததாக ஜெனியே ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு பாக்கியா மற்றும் செழியன் கூட்டு வருகிறார்கள்.

இங்கே பாக்யா வீட்டில் ஜெனிக்கு இப்படி ஆனது தெரிந்ததும் கோபியின் அம்மா ரொம்பவே டென்ஷன் ஆகி புலம்பிகிட்டு இருக்காங்க. அடுத்ததாக ஜெனி வந்ததும் எந்த பிரச்சனையும் இல்லல்ல என்று கேட்டு அவரை ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுகிறார். பிறகு அந்த நேரத்தில் வீட்டிற்கு ராதிகா வந்ததும் பாக்யாவிடம் ஜெனி எப்படி இருக்கா நல்லா இருக்காளா என்று கேட்டுட்டு இருக்காங்க.

Also read: விஜய் டிவியில் அவமானப்பட்ட கோபி.. இந்த காரணத்திற்காக தான் சீரியலில் இருந்து விலக நினைத்தார்

உடனே கோபியின் அம்மா நீ தான் ஜெனிய புடிச்சு கீழே தள்ளி விட்டாயா என்று மனசாட்சியே இல்லாம ராதிகாவை பார்த்து கேட்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியாகிறார் ராதிகா. ஆனா கோபி அம்மாவை பார்க்கும் பொழுது ராதிகாவை விட நிஜமான வில்லி இவராகத்தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது.  தப்பு பண்ணும் போதெல்லாம் கண்டுக்காம விட்டாச்சு. இப்ப தப்பே செய்யாமல் நல்லது செஞ்சிட்டு வந்துருக்காங்க ராதிகா.  அவரை போய் இந்த மாதிரி கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

பிறகு பாக்கியா, அத்தை ராதிகா தான் ஜெனியை கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல காமிச்சாங்க அப்படின்னு சொல்றாங்க. ஆனாலும் கோபி அம்மா ராதிகாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். இனிமேல் ராதிகா அமைதியா இருக்க போகிறாரா அல்லது ருத்ர தாண்டவம் ஆடப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -

Trending News