பாக்யாவை அலைக்கழிக்கும் ராதிகா.. கடைசியில் கிடைத்த மிகப்பெரிய ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காவே போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்த நாடகத்தில் நெகட்டிவ் ஆக நடிக்கும் கோபி தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். தற்போது கோபி, பாக்கியாவின் நண்பராக இருக்கும் பழனிச்சாமியை பார்த்து ரொம்பவே பொறாமையில் பொங்கி தவிக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி அவரும் பாக்கியவுடன் மட்டும் இல்லாமல் குடும்பத்துடனும் நெருங்கி பழகி விட்டார்.

இதனால் அடிக்கடி வீட்டுக்கு வருவதும் பேசுவதுமாக இருப்பதால் கோபி இவர்களின் நட்பை பார்த்து சந்தேகப்பட்டு புலம்பி தவிக்கிறார். என்னதான் பாக்கியா வேண்டாத மனைவியாக இருந்தாலும் அடி மனதில் தன்னுடைய மனைவி என்ற ஒரு நினைப்பு இருக்கிறதுனால தான் கோபி எல்லாத்துக்கும் இந்த அளவுக்கு ரியாக்ஷன் கொடுத்துக்கிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் பாக்கியா மட்டும் இவ்வளவு சந்தோசமாக இருப்பதை பார்த்து வயிற்றெரிச்சலும் படுகிறார்.

Also read: கடன் தொல்லையால் அசிங்கப்பட்ட கண்ணன்.. பொய் பித்தலாட்டம் பண்ணும் ஐஸ்வர்யா

அடுத்ததாக இன்றைய எபிசோடு படி இனியா டைனிங் டேபிள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கோபி என்ன இனியா இங்க வைத்து படிக்கிறாய் ரூமுக்கு போய் படிக்க வேண்டியது தானே என்று கேட்கிறார். அதற்கு இனியா எனக்கு என்று தனி ரூம் எங்கே இருக்கிறது என்று சொல்ல உடனே கோபி மன்னித்துவிடு அதுதான் நான் எடுத்து விட்டேன் என்று குற்ற உணர்ச்சியில் ஃபீல் பண்ணுகிறார்.

உடனே கோபி என்னுடைய ரூமில் வந்து படி நான் உனக்கு சொல்லித் தருகிறேன் என்று இனியாவை கூட்டு போகிறார். பிறகு அங்கே கோபி ஒவ்வொரு பாடமாக இனியாவுக்கு எடுத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராதிகா உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சியாகிறார். எப்படியாவது இனியாவை வெளியே அனுப்ப வேண்டும் என்று சில பல வேலைகளை செய்கிறார்.

Also read: கோபியின் வயிற்றெரிச்சலும் பொறாமையும்.. பாக்கியா பழனிச்சாமியின் தரமான சம்பவம்

ஆனால் அதற்கு அசராத கோபி குழந்தை படிக்கிறாள் தொந்தரவு பண்ணாத நீ கொஞ்ச நேரம் வெளில போ என்று கூறி விடுகிறார். இதைக்கேட்டதும் அதிக காண்டாகிறார் ராதிகா. அடுத்ததாக ராதிகா எல்லா கோபத்தையும் பாக்கியா மேல் காட்டும் விதமாக ஆபீஸ்க்கு சென்று கேண்டீன் விஷயமாக உங்க கூட கொஞ்சம் பேசணும் என்னுடைய ரூமுக்கு வாங்க என்று பாக்யாவிடம் சொல்கிறார்.

அதனால் பாக்கியாவும் கேண்டினில் வேலையை முடித்த பிறகு ராதிகா ரூமுக்கு போகிறார். ஆனால் ராதிகா உள்ளே விடாமல் கொஞ்ச நேரம் வெளில வெயிட் பண்ணுங்க எனக்கு வேலை முடிந்ததும் நானே கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதனால் அதிக நேரமாக வெளியிலே காத்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. உண்மையில் ராதிகா இவரை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பாக்யாவை அலைக்கழிக்கிறார். ஆனால் கடைசியில் இவருக்கே ஆப்பாக முடிகிறது.

என்னவென்றால் அந்த நேரத்தில் வந்த மேனேஜர் பாக்கியவை பார்த்து என்னாச்சு ஏன் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ராதிகா மேடம் ஏதோ பேசணும் என்று கூப்பிட்டாங்க அதன் வெயிட் பண்றேன் என்று சொல்ல, உடனே மேனேஜர் ராதிகாவிடம் அவர்களுக்கு கேண்டின்ல எவ்வளவு வேலை இருக்கும். அவங்க என்ன சும்மாவா இருக்காங்க எப்படி நேரத்தை வேஸ்ட் பண்றீங்க என்று ராதிகாவை கண்டிக்கிறார். பாவம் பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த ராதிகாவிற்கு தான் ஆப்பு வந்தது.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்