தத்தியாக இருக்கும் பாக்கியா.. கோபியை ஒவ்வொரு நாளும் ராதிகா செய்யும் டார்ச்சர்

ஒரு நேரத்தில் குடும்பத்துடன் பார்த்து வந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது கொஞ்சம் எரிச்சல் வருகிற மாதிரி எபிசோடுகள் தொடர்ந்து வருகிறது. அதற்கு காரணம் கோபி மற்றும் ராதிகா என்ன பண்ணாலும் அமைதியாக பொறுத்துக் கொள்ளும் பாக்கியா தான். குனிய குனிய கொட்ட தான் செய்வாங்க என்று சொல்வதற்கு ஏற்ப பாக்கிய இவ்வளவு அமைதியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அதற்கேற்ற மாதிரி தற்போது ராதிகாவும் கோபியும் பாக்கியா வீட்டிற்கு வந்து ஒவ்வொரு நாளும் அட்டகாசம் செய்து வருகிறார்கள். அதிலும் ராதிகா ஓவராக உரிமை கொண்டு கிச்சனில் சொந்த வீடு மாதிரி ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். இதை தட்டிக்கேற்பதற்கும் அங்கே யாருமே இல்லாத மாதிரி இருப்பது தான் கடுப்பாக இருக்கிறது.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

அதிலும் பாக்கியா என்னமோ மனதில் தியாகி என்று நினைப்பில் பிடித்து வைத்த களிமண் மாதிரி தத்தியாகவே இருக்கிறார். அடுத்ததாக கோபி, இதுவரை ராதிகா வேண்டும் என்று அவரது பின்னாடியே அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர் இப்போ காபி வேணும் என்று காணாத கண்டது மாதிரி அலைகிறார். ஆக மொத்தத்துல கோபி எதையாவது தேடி அலைஞ்சுகிட்டு தான் இருக்காரு.

இதற்கிடையில் பாக்யாவின் மாமியார் இன்னும் திருந்தாமல் கோபிக்காக இரக்கப்பட்டு ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். ஏற்கனவே இவர் செய்த காரியத்தால் தான் இந்த அளவுக்கு வந்து இருக்கிறது. இப்பொழுது மறுபடியும் கோபி மீது இரக்கப்பட்டு பாக்கியாவிடம் கோபிக்கு ஒரு காபி போட்டு கொடுக்கணும் என்று சொல்கிறார். ஆனால் அதற்கு பாக்யா என்னால முடியாது அத்தை என்று சொல்லிவிடுகிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

உடனே பாக்யாவின் மாமியார் நானே போடுகிறேன் என்று காபி போட்டு இனியாவிடம் கொடுத்து உங்க அப்பா கிட்ட போயி இதை கொடு என்று அனுப்பி வைக்கிறார். இனியாவும் காபி வாங்கிக் கொண்டு மாடிக்கு கொண்டு போகிறார். அங்கே கோபி இருக்கும் கதவை தட்டுகிறார். உடனே ராதிகா வந்து கதவை திறக்க காபி கப்பை பார்த்ததும் எனக்காக காபியா குடு அப்படி என்று கேட்கிறார்.

அதற்கு இனியா இது உங்களுக்கு இல்லை என்னுடைய அப்பாவுக்கு என்று சொல்லி உள்ளே போய் கோபி இடம் கொடுக்கிறார். இதே பார்த்த ராதிகா இந்த ரூமில் நம்ம ரெண்டு பேரும் தான் இருக்கும் அதென்ன உங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு போறாங்க என்று சொல்லி கோபத்தில் காபி கப்பை கீழே தட்டி விடுகிறார். ஏற்கனவே ராதிகாவால் பாதி பைத்தியமான கோபி தொடர்ந்து இப்படி அவரை டார்ச்சர் செய்து முழு பைத்தியமாக ஆக்காமல் விடமாட்டார்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்