பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ராதிகா.. மோசமான வில்லியை தரையிறக்கும் முடிவில் விஜய் டிவி

டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துவதற்காக கதைக்களத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் டிஆர்பி-யில் கடந்த சில வாரங்களாகவே பின் தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் ரேஷ்மா விலகு உள்ளதாகவும் அவருக்கு பதில் பிரபல நடிகை களம் இறங்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இல்லத்தரசிகள் படும் பாட்டை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் கதாநாயகி பாக்யாவிற்கு வில்லியாக, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

இருப்பினும் இவருக்கு முன்பு, அந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார். அதன் பிறகு தான் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதற்கு முன் ரேஷ்மா எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமியில் அவர் நடித்த ராதிகா கதாபாத்திரம் அவருடைய சினிமா கேரியலுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் பிரபல தொலைக்காட்சியில் புதிதாக துவங்க இருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

Also Read: ஜெயிக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது.. பிக் பாஸில் சிவின் வெளியேறியதற்கு கமல் கூறிய காரணம்

இதனால் கால்சூட் பிரச்சினை காரணமாக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் ஒன்று வெளியானது. இதன்பிறகு வில்லத்தனம் நிறைந்த ராதிகா கதாபாத்திரத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நிச்சயம் ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா மட்டும் நடித்தால் இந்த சீரியல் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும் என்றும் விஜய் டிவி நம்புகிறது. அதேபோல் வனிதா விஜயகுமாரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்ததால், அவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கவும் ஒத்துக்கொள்வார். ஆகையால் கூடிய சீக்கிரம் புதிய ராதிகாவாக வனிதாவை பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read: 30 வயது வரை வெறுத்துப் போன அட்ஜஸ்ட்மென்ட்.. சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய குடும்ப குத்து விளக்கு நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்