மீண்டும் குடிபோதைக்கு அடிமையான செழியன்.. புயலில் சிக்கிய ஜெனியின் வாழ்க்கை

பல இல்லத்தரசிகளின் வாழ்க்கையை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று அன்றாட அவர்கள் படும் இன்னல்களையும் அதை கடந்து பெரும் வெற்றிகளையும் புட்டு புட்டு வைக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.

பல புதிய திருப்பங்களுடன் நிறைய ஷாக்களை கொடுத்து வரும் இந்த சீரியலில் மற்றுமொரு திருப்பமாக வரப்போகும் எபிசோட் அமைந்துள்ளது. இதில் ஏற்கனவே செழியன் மேல் ஏற்பட்ட வருத்தத்தால் அம்மா வீட்டிற்கு சென்ற ஜெனியை செழியன் மேலும் கஷ்டப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்.

ஜெனியின் இந்த பிரிவை தாங்க முடியாமல் செழியன் குடித்துவிட்டு மட்டுமல்லாமல் அப்படியே ஜெனி வீட்டிற்கு செல்ல, அங்கு ஜெனியின் பெற்றோர்கள் இருவரும் அதனை பார்த்து மிகுந்த வேதனை அடைகின்றனர்.

ஏற்கனவே மனமுடைந்த ஜெனிக்கு இது மேலும் அதிர்ச்சியாகவே இருந்தது. இது ஒருபுறமிருக்க கோபி, ராதிகா இடையேயான உறவு பலப்பட்டு கொண்டிருக்கிறது.

serial-cinemapettai87
baakiyalakshmi-serial-cinemapettai87

மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி சுத்தமாகவே இல்லை என்று கோபி ராதிகாவிடம் புலம்ப, இதுதாண்டா நல்ல டைம் என ராதிகா கோபியை விவாகரத்து வாங்கச் சொல்கிறார்.

அப்பொழுது சோகமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு குத்தாட்டம் போட்டு கொண்டாடினார். இதுபோன்ற பல திருப்பங்களை பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொன்றாக இந்த வாரம் அவிழ்த்துவிட உள்ளதால் ரசிகர்கள், அவற்றைக் காண ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்