எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அசராத ராதிகா.. மச்சக்கார கோபி அங்கிள்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் துரோகம் செய்த கணவருக்கு விவாகரத்து கொடுத்துவிட்ட பாக்யா நேராக வீட்டிற்கு செல்லாமல், ஹோட்டலுக்கு சென்று வேண்டியதையெல்லாம் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். கூடவே இருக்கும் எழிலுக்கு பாக்யாவின் இந்த நடவடிக்கை கொஞ்சம் வினோதமாக தெரிகிறது.

இதன்பிறகு பாக்யா  கோபியின் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்க போகிறாரா அல்லது அவருடைய மசால் கம்பெனியில் தங்குவாரா என்ற குழப்பம் எழிலுக்கு எழுகிறது. இது ஒருபுறமிருக்க விவாகரத்து ஆன கையோடு வீட்டிற்கு வந்த கோபி, பாக்யாவை தவறாக சித்தரித்து குடும்பத்தினரிடம் தரக்குறைவாக பேசுகிறார்.

கோபி மட்டும் கொஞ்சம் இறங்கி வந்து பேசி இருந்தால், பாக்யா விவாகரத்து வாங்கி இருக்க மாட்டார் என கோபியின் அப்பா மற்றும் ஜெனி இருவருக்கும் தோன்றுகிறது. ஆனால் தன்னை தியாகி ரேஞ்சுக்கு சித்தரித்து பேசும் கோபி, மகள் இனியாவிடம் பாக்யா யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக அவதூறாக பேசுகிறார்.

மேலும் ராதிகா ஜெனிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு, பாக்யாவிற்கு விவாகரத்து ஆகி விட்டதா என எதுவும் தெரியாததுபோல் கேட்கிறார். உடனே ஜெனி கோபத்தில் கத்துகிறார். ‘எல்லா பிரச்சினைக்கும் ஆதி காரணமாக இருந்து கொண்டு, கூட்டு குடும்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை இப்படி பிரித்து விட்டீர்களே’ என ஜெனி ராதிகாவை திட்டுகிறார்.

ஜெனி இடமிருந்து போனை வாங்கிய பாக்யாவின் மூத்த மகன் செழியன், ராதிகாவிடம் தரக்குறைவாக பேசி, ராதிகாவை கெட்ட வார்த்தையில் திட்ட துணிகிறார். இனிமேல் எங்களுக்கு போன் செய்து பேசினால் அசிங்கப்பட்டு விடுவீர்கள் என்றும் செழியன் ராதிகாவை கழுவி கழுவி ஊற்றினாலும் அதற்கெல்லாம் அசராத ராதிகா தன்மீது இப்பவும் தவறு இல்லாதது போன்றே நடந்து கொள்கிறார்.

ஜெனி பேசியதை மனதில் வைத்துக்கொண்டே அழுதுகொண்டிருந்த ராதிகாவிடம், அவருடைய அண்ணன் சமாதானப்படுத்துகிறார். ‘பிரச்சனை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. உனக்கு மட்டுமே நீ நல்லவனாய் இரு’ என  ராதிகாவை அவருடைய அண்ணன் உசுப்பேற்றி கோபியுடன் சேர்த்துவைக்க படு கேவலமான வேலையை பார்க்கிறார்.

இதன் பிறகு ராதிகாவை மீண்டும் சந்திக்க வரும் மச்சக்கார கோபி, அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி 50 வயதில் கல்லூரி காதலி ராதிகாவை திருமணத்திற்கு ஒத்துக்க வைக்கப் போகிறார். இதற்கு ராதிகாவின் அண்ணன் மற்றும் அம்மா இருவரும் கோபிக்கு உடந்தையாக இருக்கப் போகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்