வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முழு பைத்தியமாக மாறிய ராதிகா.. அம்மு குட்டினு கொஞ்சிட்டு அசிங்கப்பட்ட கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்று வருகிறது. தனக்கு எந்த விதத்திலும் ஒத்து வராத பாக்கியாவை உதறித் தள்ளிவிட்டு ராதிகாவுடன் சேர்ந்தால் நம் எதிர்பார்த்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டார் கோபி. ஆனால் அதன் பிறகு தான் நரகம்னா என்ன கல்யாணம்னா என்ன என்று ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்.

ராதிகாவால் தினந்தோறும் கோபி நிம்மதி இல்லாமல் இருந்த நிலையில் கொஞ்ச நாளாகவே குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அதனால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடுரோட்டியில் தவித்த நிலையில் அவரது மகன் செழியன் கோபியை அழைத்து அவர் வீட்டுக்கே கூட்டிட்டு வந்தார். பிறகு கோபி வருவார் என்று இவருக்காக இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்த ராதிகா அவருடைய அம்மாவின் பேச்சைக் கேட்டு பாக்கியா வீட்டிற்கு பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

பிறகு கோபி காலையில் எழுந்து பார்க்கும் பொழுது நாம் இங்கு எப்படி வந்தேன் என்று அதிர்ச்சியில் இருந்த பொழுது ராதிகா அடுத்ததாக ஷாக் கொடுக்கிற மாதிரி கோபி இருக்கும் இடத்திற்கு வந்து இனிமேல் நானும் இங்கு தான் இருக்கப் போகிறேன். இதுதான் என் வீடு என்று கூறுகிறார். உடனே கோபத்தில் பாக்கியாவின் மாமியார் அவரை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா நான் ஏன் போக வேண்டும் நான் இந்த வீட்டில் இருப்பதில் உங்களில் யாருக்காவது பிரச்சனை என்றால் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று அடாவடித்தனமாக பேசுகிறார். இதைக் கேட்ட கோபி, ராதிகாவை தனியாக கூப்பிட்டு நாம் இங்கு இருந்தால் நிம்மதி இருக்காது. அதனால் நம்முடைய வீட்டிற்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா இல்லை கோபி அதெல்லாம் சரிப்பட்டு வராது இனிமேல் நாம் இங்கே இருந்து விடலாம் என்று கூறுகிறார்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

பிறகு கோபி எவ்வளவோ சமாளித்தும் அவரால் முடியாமல் அம்மு குட்டி கண்ணே மணியே என்று கொஞ்சி பார்த்து கெஞ்சுகிறார். ஆனாலும் ராதிகா எதிர்க்கும் பிடி கொடுக்காமல் கோபியை பார்த்து என்னை ஏமாற்றியதெல்லாம் போதும் இனி மேலும் நான் ஏமாற தயாராக இல்லை அந்த அளவுக்கு நான் முட்டாளும் இல்லை என்று பைத்தியம் பிடித்தது போல் பேசுகிறார். பிறகு வெளியில் வந்த ராதிகாவிடம் பாக்கியாவின் மாமியார் என்ன முடிவு பண்ணிட்டியா வெளில போறியா இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகா என்னால போக முடியாது என்று கூற உடனே பாக்யாவின் மாமியார் கோபத்தை காட்ட உடனே ராதிகாவின் அம்மா வந்து என்ன எல்லாரும் சேர்ந்து என் பொண்ண கொடுமை படுத்துறீங்களா நான் போலீஸ்க்கு போன் பண்ணி சொல்லி உண்டு இல்லைனு ஆக்கிடுவேன் என்று சொல்லி என் மகள் இனிமேல் இங்குதான் இருப்பாள் சட்டப்படி அவள் தான் கோபியின் மனைவி மற்றும் உங்க வீட்டு மருமகள் கூட என்று சொல்லிவிட்டார். இனிமேல் கோபியின் நிலைமை திண்டாட்டம் தான்.

Also read: 40% சொத்தில் ஆப்பு வைத்த அப்பத்தா.. ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண முடியாமல் தவிக்கும் குணசேகரன்

- Advertisement -

Trending News