வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற தற்போது சீரியல்களில் பாக்கியலட்சுமி தான் கொஞ்சம் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. அதற்கு காரணம் கோபியின் எதார்த்தமான நடிப்பு. அப்படிப்பட்ட இவருக்கு விஜய் டெலிவிஷன் அவார்டு கொடுக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது. இருந்தபோதிலும் அவருடைய நடிப்புக்கு இன்னும் அதிகமான ரசிகர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ராதிகாவை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண கோபி ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழ முடியாமல் பரிதவித்து வருகிறார். இதனால் வீட்டிற்கு தினமும் குடிக்கிற பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொண்டார். அதிலும் நேற்றைய எபிசோடில் இவர் பண்ணிய கலட்டா நிஜமான குடிகாரனை மிஞ்சும் அளவிற்கு கச்சிதமாக நடித்திருந்தார்.

Also read: டம்மி பீஸ் இடம் சத்தியம் வாங்கிய குணசேகரன்.. ஜனனியை விட ரேணுகா பரவாயில்லை

சுய நினைவே இல்லாத பொழுது நடுத்தெருவில் மயங்கி கிடந்த இவரை மனசு கேட்காமல் இவருடைய அம்மா மற்றும் செழியன் கோபியை அழைத்து வீட்டுக்கு வந்து விடுகிறார். தான் யார் என்றும் சுத்தி இருக்கிறவங்க யார் என்று கூட தெரியாத அளவுக்கு மட்டையாகி விட்டார். இந்த நிலைமையில் கோபியை பார்த்த ஈஸ்வரி மற்றும் அப்பா வருத்தப்படுகிறார்கள்.

பிறகு மறுநாள் காலையில் இரவு என்ன நடந்தது என்று தெரியாமல் தயங்கி தயங்கி கீழே வந்த கோபி தல வலிக்குது அப்படி என்று சோகமாக இருக்கிறார். பிறகு இவருடைய அம்மா காபி போட்டு கொடுக்கிறார். அத்துடன் எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட உன்னை நினைச்சா கவலையாக இருக்கிறது என்று சொல்ல, எல்லாத்துக்கும் முழுக்க காரணம் ராதிகா தான். நீ அவளை டைவர்ஸ் பண்ணி விடு என்று சொல்கிறார்.

Also read: கரிகாலனுக்கு மாவு கட்டு போட்டு விட்ட அரசு.. குணசேகரனுக்கு பயத்தை காட்டிய மருமகள்கள்

அந்த நேரத்தில் உள்ளே வந்த ராதிகா கோபியிடம் சண்டை போடுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி இவனை கட்டிக்கிட்டு உனக்கும் நிம்மதி இல்லை, இவனுக்கு நிம்மதி இல்லை பேசாம ரெண்டு பேரும் டைவர்ஸ் வாங்கிட்டு உங்க உங்க வேலைய போய் பாருங்க என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்து பிரச்சினை பண்ணுகிறார். ஆக மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் விதமாக ராதிகா இருக்கிறார்.

இதனை அடுத்து ராதிகாவை சமாதானப் படுத்துகிறார் கோபி. ஆனால் ராதிகா வழக்கம் போல் சண்டையே ஆரம்பித்து விடுகிறார். இதனால் கடுப்பான கோபி ஆபீஸ் கிளம்பி கீழே வருகிறார். அப்பொழுது டைனிங் டேபிளில் இருந்து தலையை பிடித்து ஒரு காபி கிடைக்குமா என்று ஏக்கத்துடன் பாக்கியாவை பார்க்கிறார். ஆனால் அவரும் காபி போடுகிறார் அதை எடுத்து கோபியிடம் தான் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மாமனாரிடம் கொடுக்கிறார். மொத்தத்தில் பாக்கியா, கோபியை கண்டுக்கவே இல்லை தண்ணீர் தெளித்து விட்டுட்டார். இனி கோபியின் கெதி அதோ கெதி.

Also read: இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை பட்டா இப்படித்தான்.. ஐஸ்வர்யாவை உருட்டி எடுத்த முல்லை

- Advertisement -

Trending News