புசி ஆனந்த் இருக்கும் வரை விஜய்க்கு சங்கு தான்.. இளைஞர்களை வழிநடத்த தளபதி எடுத்த ஆயுதம்

விஜய் நேற்று 10,12 வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இருந்தது அவருடைய இந்த விழா. வரும் காலம் இந்திய மாணவர்களின் கையில்தான் இருக்கிறது என ஆணித்தனமாக அடித்து பேசினார் தளபதி.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய மாணவர்களையும் நாட்டையும் சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக சில உறுதிமொழிகளை இளைஞர்களை எடுக்கச் செய்து உயர்ந்து நின்றார் தளபதி. நல்ல நண்பர்களையும், சுற்றி உள்ள கூட்டத்தையும் தேர்வு செய்து ஒழுக்க நெறியில் இருங்கள் என அறிவுறுத்தினார்.

இளைஞர்களை வழிநடத்த தளபதி எடுத்த ஆயுதம்

இப்படி விஜய் புறம் மேடையில் கைத்தட்டளை வாங்கிக் கொண்டிருக்கும் போது பூசி ஆனந்த் செய்யும் செயல்கள் சில வேடிக்கையாக இருக்கிறது. பத்திரிகையாளர்களை கூப்பிட்டு தேவையில்லாதவற்றையெல்லாம் பேசி வருகிறார். தளபதியால் தான் எல்லாம் முடியும் என்றெல்லாம் சில விஷயங்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னென்ன சாப்பாடு இருக்கிறது என்று மெனு முதற்கொண்டு அனைவரிடமும் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே விஜய்யின் தந்தை சந்திரசேகர் என் மகனுக்கு அரசியல் ஆசையை தூண்டியது புசி ஆனந்த் தான் என்று குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் இவர் இப்படி நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

கட்சி சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை உளறி கொட்டுகிறார். மக்களிடம் விஜய்க்கு இருக்கும் பெயரை இவர் எங்கே கெடுத்து விடுவாரோ என பல பேர் பயப்படுகிறார்கள். விஜய் தான் இதற்கெல்லாம் கூடிய விரைவில் ஒரு தடை போட வேண்டும்.

Next Story

- Advertisement -