தினமும் பேப்பர், பால் பாக்கெட் வாங்குவதற்கு தான் லாயக்கு.. அசிங்கப்பட்டு போன புஷ்பா புருஷன்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கோபி, அவருடைய வீட்டில் இனி செல்லாக்காசாக தான் இருக்கப் போகிறார். ஏனென்றால் ராதிகாவிற்கு இப்பொழுது கோபியின் மீது இருக்கும் காதலை விட பாக்யாவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.

இதனால் நாளுக்கு நாள் கொடூரமாக வில்லியாக மாறி வரும் ராதிகா கோபியை பேப்பர், பால் பாக்கெட் வாங்கிட்டு வருவதற்கும் தன்னுடைய மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதும், கூட்டிக்கொண்டு வந்து விடுவதும் போன்ற வேலைகளை செய்யும் வேலைக்காரர் ஆகவே மாற்றிவிட்டார்.

Also Read: இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

இதையெல்லாம் கண்ணார பார்த்த கோபியின் அப்பா ராமமூர்த்தி அவரை படு கேவலமாக திட்டுகிறார். ஏனென்றால் கோபியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்கிய பாக்யாவை விட்டுவிட்டு சாக்கடையில் விழுந்த கோபிக்கு இது சரியான தண்டனை என்றும் அவர் கைதட்டி சிரிக்கிறார்.

மேலும் கோபி தன்னுடைய சந்தோஷம்தான் முக்கியம் என மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் தலைக்கு மேல் வளர்ந்த பிறகும் இரண்டாவது திருமணத்தை செய்து சுயநலமாக மாறியதால் குடும்பமே அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் இருக்கிறது.

Also Read: விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

ஆனால் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவை கொடைக்கானலுக்கு ஹனிமூன் கூட்டி சென்ற கோபி, எவ்வளவு பெரிய சுயநலவாதி என்பதை குடும்பமே பார்த்து விட்டது. எனவே மகள் இனியா, பாக்யா, கோபியின் அம்மா அப்பா அனைவரும் கோபியை தூக்கி எறிந்து விட்டனர்.

அதற்கேற்றார்போல் பாக்யா துணிச்சலுடன் தன்னுடைய குடும்பத்தை இரண்டு கண்ணாக நினைத்து அக்கறையுடன் பார்த்து வருகிறார். ஆனால் கோபிக்கு ராதிகா வீட்டில் நாளுக்கு நாள் படுமோசமான நிலைமைதான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7 பேர்.. சாந்தியை தொடர்ந்து வெளியேறும் அடுத்த நபர் இவர்தான்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -