தளபதி கூட்டணிக்கு ஆசைப்படும் புஷ்பா பட இயக்குனர்.. விஜய் கூறிய பதில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு வசூல் மன்னனாக திகழ்பவர் நடிகர் விஜய் தான். சமீபகாலமாக விஜய்யின் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள சுகுமார், தளபதி விஜய் உடன் நிச்சயம் பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். செம்மரம் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜய் பற்றி இயக்குனர் சுகுமார் பேசியுள்ளார். அதில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண், சமந்தா நடிப்பில் 2018 ல் வெளியான ரங்கஸ்தலம் படத்தை விஜய் பார்த்துவிட்டு சுகுமார் உடன் பணியாற்ற வேண்டும் என விஜய் கூறியுள்ளாராம்.

இந்தச் செய்தியை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சுகுமார்யிடம் சொன்னதாக பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுகுமார் தமிழ் படங்களை இயக்கினால் தளபதி விஜயுடன் நிச்சயமாக பணிபுரிவேன் என கூறியுள்ளார். இந்தச் செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்