பிக்பாஸ் ராஜு பாய்க்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.. அதுக்குள்ள இத்தனை படங்களா.?

விஜய் டிவியில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி நாளை நெருங்கி வருகிறது. இதனால் பிக்பாஸ் டைட்டிலை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.

இவர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வருபவர் ராஜு. விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் என்றால் சீரியலின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு நாம்இருவர்நமக்குஇருவர் 2 என்ற சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் அவரின் துறுதுறுப்பான நடிப்பும், டைமிங் காமெடியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது.

இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்த பிரபலத்தின் மூலம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீரியலில் அவருக்கு கிடைத்த ரசிகர்களை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னும் அதிக ரசிகர்கள் கிடைத்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் வாரா வாரம் நாமினேட் ஆகும் ராஜு, ரசிகர்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் செய்யும் சின்ன சின்ன சேட்டைகளை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். இதனால் இந்த பிக்பாஸ் டைட்டிலை ராஜூ தான் வெல்வார் என்ற ஒரு கருத்து கணிப்பும் உலா வருகிறது. இந்நிலையில் ராஜுவை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள். அதேபோல் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜுவுக்கும் அந்த ஆசை நிறையவே உண்டு.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான காரணமும் இதுதான். எப்படியாவது சினிமா துறையில் நுழைந்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு நிறைய உண்டு. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நகைச்சுவையான சில கதைகளை கூறி போட்டியாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.

இப்படி பல திறமைகளைக் கொண்ட ராஜு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு வாய்ப்பு தேடி எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து எப்போது வருவார் என்று பல தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 திரைப்படங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவரை தங்கள் படங்களில் நடிப்பதற்கும், இயக்குவதற்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் இனி பிக்பாஸ் ராஜுவின் லெவலே வேற என்று பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.