வாய்ப்பு கொடுக்காமல் விரட்டியடித்த தயாரிப்பாளர்.. நொந்து நூடுல்ஸ் ஆன பிக்பாஸ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருவர் புகழின் உச்சிக்கு செல்ல முடியும். அதே சமயத்தில் பாப்புலராக இருக்கும் பிரபலங்கள் தங்கள் புகழை இழக்கவும் நேரிடும்.

அப்படி ஒரு சம்பவம் தான் பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுனுக்கு ஏற்பட்டுள்ளது. தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாததை பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் மீரா மிதுன். அந்த வகையில் இவரை வெறுக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

இருப்பினும் உலக அழகி நான்தான் என்று அவர் இன்று வரை அலப்பறை கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய இவர் ஓவராக பேசி ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறார்.

மேலும் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் சிறை வரை சென்று திரும்பியிருக்கிறார். இப்படி பல பிரச்சினைகளுக்கு நடுவே சிக்கி தவித்த இவர் சமீபத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் பண பிரச்சினையில் தவித்து வருகிறேன். இதனால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதை பார்த்து பரிதாபப்பட்ட ஒரே ஒரு இயக்குனர் மட்டும் அவருக்கு தன்னுடைய வெப் தொடரில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார். கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு சம்மதம் கூறிய மீராமிதுன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார்.

அப்போது அவரைப் பார்த்த தயாரிப்பாளர் இந்த நடிகை வேண்டாம் வேறு யாரையாவது புக் செய்யுங்கள் என்று அவரை விரட்டி விட்டாராம். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அந்த தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராம்.
இவர் சூர்யாவைப் பற்றி எந்த அளவிற்கு மோசமாக பேசினார் என்று அனைவருக்குமே தெரியும்.

அதனால் தான் சூப்பர் மாடலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்த கவர்ச்சி வாய்ப்பு கூட போய் விட்டதே என்ற கவலையில் அவர் இருக்கிறாராம். இனியாவது அவர் ஓவர் வாய் பேசாமல் பிழைத்துக் கொள்வாரா என்று பார்ப்போம்.

Next Story

- Advertisement -