வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கன்னி தீவு போல் முடியாத லியோ ட்ரெய்லர் சர்ச்சை.. மண்ட கோளாறு தயாரிப்பாளர் வாயில் விழுந்த விஜய்

Vijay-Leo: லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய ஒரு வார்த்தை இப்போது மிகப்பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. இது படகுழுவுக்கு பிரமோஷனாக அமைந்ததோ இல்லையோ இதை வைத்து பல பேர் பப்ளிசிட்டியை தேடி கொள்கிறார்கள். அதிலும் விஜய் தயாரிப்பாளர் ஒருவரின் வாயில் விழுந்து சின்னாபின்னமாகி இருக்கிறார்.

மைக்கை பிடித்தாலே ரஜினி, அஜித், விஜய் என பலரையும் வம்புக்கு இழுத்து பேசுவதையே வழக்கமாக வைத்திருப்பவர் தான் தயாரிப்பாளர் ராஜன். மண்ட கோளாறு பிடித்தவர் என்று அழைக்கப்படும் இவர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது லியோ ட்ரெய்லரில் விஜய் பேசி இருந்த கெட்ட வார்த்தை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறி இருப்பதாவது, கேடு கெட்டவனிலும் கேவலமானவன் தான் இப்படி ஒரு வார்த்தையை பேசுவான். பலரும் மறந்து போயிருந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது மீண்டும் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. ஒரு பெரிய ஹீரோ இப்படி பேசும் போது அது சாமானிய மக்களை சாதாரணமாக சென்றடைந்து விடுகிறது.

இவர் எங்கே நல்ல தலைவனாக வரப் போகிறார். லோகேஷ் தம்பி பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். ஆனால் இது தமிழ்நாடு, இப்படியெல்லாம் பேசினால் சறுக்கிவிடும். நாலு பேர் பேசியதை 4 கோடி பேர் கேட்கும் படி செய்து விட்டார்கள். கோடி கோடியாய் பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி பேசலாமா என அவர் விஜய்யை தாறுமாறாக கிழித்துள்ளார்.

மேலும் ஒரு வீட்டில் பாத்ரூம் என்று எதற்கு தனியாக வைக்கிறோம். சமையலறையிலேயே வைத்துக் கொள்ளலாமே. எது எது எங்கு இருக்க வேண்டுமோ அங்குதான் இருக்க வேண்டும். அதுதான் தமிழ் பண்பாடு, பேச்சை குறைத்து பேசி தவறுகளை தவிர்த்து பேசினால் தான் நீ நல்லவன்.

அதை விட்டுவிட்டு இப்படி பேசினால் அது இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டாக மாறிவிடும் என்று கொந்தளித்துள்ளார். தற்போது ராஜன் பேசியுள்ள இந்த வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே விஜய் மீது கடுப்பில் இருக்கும் அவருக்கு லட்டு போல் இந்த விஷயம் கிடைத்தால் சும்மாவா விடுவார். ஆக மொத்தம் லோகேஷால் விஜய்க்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்து விட்டது.

- Advertisement -

Trending News