வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சைடு கேப்பில் போட்டு வாங்கிய பிரியங்கா.. சிக்காத தலைவி தாமரை.!

பிக் பாஸ் சீசன்5ல் வீட்டின் தற்போதைய தலைவர் தாமரைச்செல்வி. VJ பிரியங்கா தேஷ்பாண்டேக்கும், தாமரை செல்விக்கும் இடையே நடந்த சிறிய உரையாடலில், எக்குத்தப்பாக பேசி மாட்டிக்கொண்டார் பிரியங்கா. இந்த பல்பு உனக்கு தேவையா பிரியங்கா? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரியங்காவை கலைப்பதற்கு என்றே சோசியல் மீடியாவில் தனி கூட்டம் இயங்கி வருகிறது. இவ்வாறிருக்கையில் தேவையில்லாததை பேசி அவரே மாட்டி கொள்கிறார். தாமரையிடம் பிக் பாஸ் வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர் யார்? என்று கேட்கிறார் பிரியங்கா.

அனைவருமே என்று தாமரைச்செல்வி பதில் கூறவே, நீ என்னோட பிரண்டு தானே, நீ எனக்கு பிரண்டா இருக்கிறதுக்கு எனக்கு என்ன பலன் இருக்கு என்று கேட்கிறார் பிரியங்கா. அதனை தொடர்ந்து இப்ப சொல்லு எல்லா வேலையும் செய்கிற நல்ல பிள்ளை யாருன்னு என்று கேட்க உஷாரான தாமரைச்செல்வி சற்றும் தயங்காமல் நாடியா என்று கூறிவிட்டார்.

‘பேசாம பார்த்திரத்த தேச்சுட்டு போவியா அதவிட்டுட்டு, உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல பிரியங்கா!’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நாடியா என்று கூறிய தாமரைச்செல்வி பிரியங்காவை விட்டு நான்கடி நகர்ந்து நின்று இடுப்பை ஆட்டி நக்கல் செய்கிறார்.

bb5-priyanga-cinemapettai
bb5-priyanga-cinemapettai

தாமரைச்செல்வி நகர்ந்து செல்லும்போது பிரியங்கா இந்தி பாடல் ஒன்றை பாடுகிறார். இவரின் பாடலும், அவரின் ஆடலும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. எனவே இந்த காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

ஆனால் பிரியங்கா தனது பெயரை தாமரைச்செல்வி கூற வேண்டும் என்று எதிர்பார்த்தார் என்பது நேரடியாக தெரிய வருவதால் ரசிகர்கள் சற்று கடுப்பாகி உள்ளனர். தனது தோழியாக இருந்து, தன் பெயரை சொல்ல வேண்டுமென்று பிரியங்கா எதிர்பார்த்து உள்ளார்.

- Advertisement -

Trending News