பிரியங்கா மட்டும் இல்லன்னா இந்த பிக்பாஸ் சீசனே இல்ல.. தேர்ந்தெடுக்கப்பட்ட மொக்க போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 5 ல் இசைவாணி,  ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வட்டி, பாவனி ரெட்டி, சின்னப்பொன்னு, இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா, ஐகி பெர்ரி, நாடியா சாங், வருண், தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பேர் பிக்பாஸ் வீட்டினுள் போட்டியாளர்களாக சென்றுள்ளனர் .

இதில் வெறும் 7 பேர் மட்டுமே ஆண் போட்டியாளர்களாகவும், மற்ற அனைவரும் பெண்களாக உள்ளதால் இந்த சீசனிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகம். அதிலும் குறிப்பாக மாடல் அழகிகளாகவே உள்ளனர். ஜெர்மனி, மலேசியா, பெங்களூரு என சுத்து வட்டாரத்தில் இருக்கும் மாடல் அழகிகள் எல்லாம் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் பிடித்துப் போட்டுள்ளனர்.

விஜய் டிவி ஏன் இப்படி போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளனர் என்றால், மாடல் அழகிகளை பிக் பாஸ் வீட்டில் பார்ப்பதற்காகவே இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்பதே அவர்கள் போட்ட பிளான்.

எனினும் நேற்றைய நிகழ்ச்சியை வைத்துப்பார்த்தால் பிரியங்காவின் சத்தம் மேலோங்கி உள்ளது. இந்த சீசனில் பிரியங்காவின் அட்ராசிட்டி அளவில்லாமல் போகும் என்பது தெளிவாக தெரிகிறது. போன சீசனில் அர்ச்சனா பார்த்த வேலையை தான் தற்போது பிரியங்கா பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவே பிரியங்கா தெரிகிறார். மேலும் சீரியல் நடிகர் ராஜு காமெடி, கதை சொல்கிறேன் என்ற பெயர் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுவாரசியம் நிறைந்த போட்டியாளர்களாக இருக்க வாய்ப்பில்லை.

bb5-contestants-cinemapettai1
bb5-contestants-cinemapettai1

எனவே பிக் பாஸ் சீசன் 5, கடந்த சீசன்களை விட கொஞ்சம் மொக்கையா தான் போகும் என்று ரசிகர்கள் கணித்து விட்டனர். ஏனென்றால் விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களை படுமோசமாக தேர்ந்தெடுத்து உள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்