ஒரு எபிசோடுக்கு பிரியங்கா வாங்கும் சம்பளம்.. ஆத்தாடி ஹீரோயின்களையே மிஞ்சிடுவாங்க போல

விஜய் டிவி தற்போது வரை புதுவிதமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மிகக்குறுகிய காலத்திலேயே இவ்வாறு பல ரசிகர்களை பெற முடியும் என்றால் அதற்கு புதுவித யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பதை விஜய் டிவி அறிந்து அதன்படி செயல்பட்டு வருகிறது.

அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையுடனும், கலகலப்புடன் எடுத்துச் செல்வார். அதற்கென்றே இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மேலும் விஜய் டிவியின் டெலிவிஷன் விருதுகளில் சிறந்த தொகுப்பாளினி விருதை தொடர்ந்து மூன்று முறை பிரியங்கா பெற்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் தாமரையுடன் சண்டை, உடனே சமாதானமாவது என ஒரு சின்ன பிள்ளை விளையாட்டு போலவே இருந்தது.

இதனால் பிரியங்காவுக்கு நெகடிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது. ஆனால் அவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால்தான் பிக் பாஸ் சீசன் 5 இல் இரண்டாவது இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் தனது தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் அவருடைய சம்பளம் எவ்வளவு என்பது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிரியங்கா ஒரு எபிசோடுக்கு மட்டும் 2 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இவரது சம்பளம் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பிரியங்கா வெள்ளித்திரையிலும் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் சமீபத்தில் இணையத்தில் உலாவியது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. விஜய் டிவியிலேயே இவ்வளவு சம்பாதிக்கும் பிரியங்காவுக்கு எதுக்கு படங்கள் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்