இந்தியாவுக்காக நிதி திரட்டிய ப்ரியங்கா சோப்ரா.. என்னதான் இருந்தாலும் சொந்த நாட்டு மேல பாசம் இல்லாம போகுமா!

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்ற நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோன்சும் இணைந்து “டுகெதர் ஃபார் இந்தியா” என்ற நிதி திரட்டலை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பேரிடர் பாதிப்பிற்கு உதவும் விதமாக இதை தொடங்கி உள்ளனர்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, “தொற்றுநோயைத் தொடர்ந்து மக்களிடையே பசி மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து போராட அனைவரும் பங்களிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில், உங்கள் பங்களிப்பு மூலம் நாங்கள் 1.3 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி திரட்டியுள்ளோம். இந்த நிதியை கொண்டு தேவையான சுகாதார வசதிகளை மேற்கொண்டதுடன், உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

priyanka-chopra
priyanka-chopra

மேலும் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த செயலை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

- Advertisement -