பிக்பாஸுக்கு பின் நேரலையில் வந்த பிரியங்கா.. எல்லா உண்மையும் இப்படி அவுத்து விட்டுட்டீங்களே

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜு அதிக வாக்குகளைப் பெற்ற தேர்வு செய்தார், அவரை தொடர்ந்து இந்த சீசனின் ரன்னர் ஆக விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்தது. எனவே ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் பிக்பாஸில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, சக போட்டியாளர்களின் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களையும் என்டர்டைன்மென்ட் செய்தனர்.

எனவே இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் பேசிக்கொண்ட கோபால், ஜிகில்லி உள்ளிட்ட வார்த்தைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது பிக்பாஸில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் ராஜு. தாமரை குறித்தும் கேலி கிண்டலுடன் விமர்சித்துள்ளார். எனவே ரசிகர் ஒருவர் ராஜு உடன் எப்போது வீடியோ போடுவீர்கள் என்று கேட்டதற்கு, ‘அவன் பொண்டாட்டி கூட போயிட்டான்’ என்றும், தாமரை குறித்து கேட்டபோது ‘தெரியல தெரியல என்று மாஸ் காட்டிட்டா’ என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது போலவே பிரியங்கா நடந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிரியங்காவிற்கு தற்போது எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் நேரலையில் ஆர்வத்துடன் விசாரித்து தெரிந்து கொண்டனர். பிரியங்காவின் அம்மாவிற்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குடும்ப உறுப்பினராகவும் நண்பராகவும் மாகாபா கிராண்ட் பினாலேவில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அளித்தது என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

106 நாட்கள் கழித்து பிரியங்கா நேரலையில் ரசிகர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய வீடியோ அவருடைய ரசிகர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. அத்துடன் அபிஷேக் குறித்த கேள்விக்கு, ‘அபிஷேக் நிறைய மூளைக்காரன் நல்ல பையன் வாழ்க்கையில் நல்லா வரணும்’ என்று பிரியங்கா கூறியிருக்கிறார். பிக் பாஸுக்கு பின் நேரலையில் வந்த பிரியங்கா வீடியோ

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை, ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் முந்தைய சீசனில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு சென்றது அபிஷேக், சுருதி, மதுமிதா, வருண், அக்ஷரா, அமீர், பாவனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட பார்ட்டி புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்