பிரியாமணியின் வாழ்க்கைக்கு வந்த ஆப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதும் பெற்றார்.

தற்போது இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆயிஷா தனது கணவரான முஸ்தபா ராஜ் 2 வது திருமணம் செல்லாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

priyamani
priyamani

இதற்கு முஸ்தபா ராஜ் தனது குழந்தைகளின் செலவுகளுக்கு தவறாமல் பணம் அனுப்பி வருவதாகவும் ஆனால் ஆயிஷா தன்னிடமிருந்து பணம் பறிக்க தற்போது முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். 2010ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் 2013ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி உள்ளோம்.

ஆனால் நான் பிரியாமணியை திருமணம் செய்து 4 வருடங்கள் ஆகிறது. தற்போது ஏன் விவாகரத்து செய்யவில்லை என குற்றம் சாட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் என் குழந்தைகளுக்காக மட்டுமே நான் இத்தனை நாள் எதுவும் பேசாமல் இருந்ததாகவும் தற்போது நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முஸ்தபா ராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -