அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பிறகு சீரியலில் நடித்து வந்தார். ஆனால் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் யானை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம்  படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போதும் கிராமத்து பெண்ணாக நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

யானை படத்தில் தனக்கான கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. ஹரி அவர்களின் படத்தில் கண்டிப்பாக கதாநாயகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பெண்களுக்குமான கதாபாத்திரமும் சிறப்பானதாக தான் இருக்கும் என கூறினார்.

அதாவது வேல் படத்தில் அசின் கதாபாத்திரமும் சிங்கம் படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரமும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதாவது கையெழுத்து போல் ஒரு ஞாபகமாகவே இருக்கும் அந்த மாதிரி தனக்கு யானை படமும் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்கும் எனவும் கண்டிப்பாக தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஹரி அவர்களின் படத்தில் நான் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. ஆனால் தற்போது அது நிறைவேறி விட்டதாகவும் காரணம் ஹரி அவர்களின் படம் ஒரு குடும்ப பாங்கான ஒரு படமாக இருக்கும் அதில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அதில் நானும் நடித்துள்ளது மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தற்போது பெருவாரியான படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதால் கண்டிப்பாக யானை படத்திற்குப் பிறகு ப்ரியா பவானி சங்கருக்கு பெருவாரியான படவாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -