ஆஸ்திரேலிய உறவால் அம்புட்டு டென்ஷனான பிரியா பவானி சங்கர். ஏட்டிக்கு போட்டியாய் கத்தி மேல நின்ன அரை மணி நேரம்

ப்ரியா பவானி சங்கர் ஒரு நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் சென்று இருக்கிறார். விஷாலுடன் ரத்தினம் படம் முடிந்த கையோடு கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார். அங்கே இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

சிங்கப்பூரில் இருக்கும் கட்டிடத் தொழிலாளர்களுக்காக ஒரு இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாடகர் சீனிவாசன் கலந்து கொண்டார். அவருடன் நடிகை பிரியா பவானி சங்கருக்கும் அழைப்பு வந்தது. அவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் சிங்கப்பூர் செல்வதற்காக பிசினஸ் கிளாஸ் டிக்கெட் கேட்டுள்ளார். அதுவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அங்கே அரை மணி நேரத்திற்கு மேல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என கட்டளை போட்டிருக்கிறார்.

ஏட்டிக்கு போட்டியாய் கத்தி மேல நின்ன அரை மணி நேரம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த அரை மணி நேரமும் கத்தி மேல் நிற்பது போல் பயங்கர டென்ஷனுடன் காணப்பட்டார். அதன் பின் அங்கிருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் விமானத்தில் ஆஸ்திரேலியா புறப்பட்டு விட்டார்.

கடந்த ஒரு மாதமாக ப்ரியா பவானி சங்கர் ஆஸ்திரேலியாவில் தன் காதலருடன் தான் ஊர் சுத்தி வருகிறார். அதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் ட்ரிப் அவருக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை கொடுத்துள்ளது. பணமும் வேண்டும், சந்தோசமாகவும் இருக்க வேண்டும், இதனால் அவர் ஏட்டிக்கு போட்டியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Next Story

- Advertisement -