ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரியா அழகுல கொஞ்சம் கூட குறையல.. அட்லீயின் மாமியார் புகைப்படம் செம வைரல்

விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்காதா? என பல இயக்குனர்கள் தேவுடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யை வைத்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் அட்லீ.

பழைய சூப்பர் ஹிட் படங்களின் காப்பி என அவர்மீது பழி சுமத்தினாலும் விஜய் அட்லீ கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து விஜய்யின் சினிமா மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அட்லீயின் மீதுள்ள ஒரே ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் சரியான திட்டமிடல் இல்லாமல் படப்பிடிப்புகளை நடத்துவதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுவது தான் என்கிறார்கள். இதை மட்டும் சரி செய்துகொண்டால் அட்லீயின் உச்ச வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர்.

அட்லீ குறும்படங்கள் இயக்கி கொண்டிருக்கும் போதே அவருடன் பழக்கத்தில் இருந்தவர் தான் நடிகை பிரியா. இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் முன்னணி நடிகைகளுக்கு தங்கையாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

அட்லீ குறும்படம் இயக்கும் போதே அட்லீயும் பிரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது காதலை உறுதி செய்தனர்.

இப்போதும் சில ரசிகர்கள் கருப்பு-வெள்ளை கோணத்தில் பிரியாவை விட அட்லி அழகு குறைவுதான் என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரியா தன்னுடைய அம்மா புகைப்படத்தை வெளியிட்டு இவ்வளவு அழகாக இருக்க காரணமே இவர்தான் என்பது போல அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

priyaatlee-mom-cinemapettai
priyaatlee-mom-cinemapettai
- Advertisement -

Trending News