கோட் பட ராசியால் வந்த விடிவுகாலம்.. 5 வருட போராட்டத்திற்கு பின் ரிலீஸ் தேதியை லாக் செய்த டாப் ஸ்டார்

Prashanth: ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்துள்ளார்.

இதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான முதல் பாடலில் அவருடைய கலக்கல் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் 5 வருடங்களாக இழுபறியில் இருந்த அவருடைய அந்தகன் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

ஹிந்தி படமான இதன் உரிமையை கடந்த 2019 ஆம் ஆண்டு தியாகராஜன் வாங்கி இருந்தார். அதை அடுத்து 2020 ஜனவரி மாதம் இப்படத்தை மோகன் ராஜா இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே அவர் எந்த படத்தை விட்டு விலகினார்.

andhagan
andhagan

அதைத்தொடர்ந்து ஜே ஜே ஃப்ரட்ரிக் கமிட்டானார். ஆனால் அவரும் விலகியதை அடுத்து தியாகராஜனே இப்படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இப்படி பல குழப்பங்களுக்கு நடுவில் இப்படம் தொடங்கியது.

அந்த வகையில் காமெடி கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இதில் பிரசாத்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். அதேபோல் கார்த்திக், அவருக்கு ஜோடியாக சிம்ரன், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு என பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

ஐந்து வருட போராட்டம்

இதற்கு முன்னதாக சிம்ரன் கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயை தான் அணுகினார்கள். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் சிம்ரன் கமிட்டானார். இப்படி உருவான அந்தகன் பலமுறை ரிலீசுக்கு தயாரானது.

ஆனால் சில குளறுபடிகளின் காரணமாக அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது பிரசாந்த் விஜய்யுடன் இணைந்து நடிப்பது ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

அதனாலயே தியாகராஜன் சூட்டோடு சூடாக இந்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் அந்தகன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அட்டகாசமான டீசரோடு இதை அறிவிப்பதற்கு படக்குழு பிளான் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ கோட் பட ராசியால் டாப் ஸ்டாரின் படத்திற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடிவுகாலம் வந்துள்ளது.

ரிலீசுக்கு தயாரான அந்தகன்

Next Story

- Advertisement -