Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரசாந்த் உதவி செய்யாமல் தவிக்க விட்ட நடிகர்.. ஆலமரம் போல் இன்று வளர்ந்து நிற்கும் நெருங்கிய சொந்தம்

பிரசாந்தின் நெருங்கிய சொந்தக்காரரான ஒரு நடிகருக்கு உதவி செய்யாமல் தவிக்க விட்டு இருக்கிறார்.

prasanth-new

Actor Prasanth: கோலிவுட்டின் டாப் ஸ்டார் என்று பெயர் வாங்கி ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் பிரசாந்த். இவர் நடிக்கும் காலத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக பெண்கள் மனதில் குடிப்பகுந்த மிகப்பெரிய ஆணழகன். அதனாலயே உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய்-வுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த அளவிற்கு மிகவும் டாப்பில் இருந்தார். இன்னும் சொல்ல போனால் ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு இவருடைய படம் தான் போட்டி என்று சொல்லும் அளவிற்கு மாசாக வலம் வந்தார். இவர் நடித்த முதல் படமான வைகாசி பொறந்தாச்சு செம ஹிட் ஆகி இவரை அனைவரும் தூக்கிக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பார்த்து வந்தார்கள்.

Also read: கம்மி பட்ஜெட்டில் பெரும் லாபம் பார்த்த பிரசாந்த்தின் 2 படங்கள்.. வேஸ்ட்டுனு நினைத்தவர்களுக்கு மூஞ்சியில் பூசிய கரி 

இதனை தொடர்ந்து செம்பருத்தி, கல்லூரி வாசல், ஜீன்ஸ் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். இவருடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து இவரை வளர்த்து விட்டவர் இவருடைய அப்பா தியாகராஜனும் தான். அப்படிப்பட்ட இவர்களுடைய குடும்பத்தில் தான் இன்னொரு நடிகரும் இருந்து வந்திருக்கிறார்.

ஆனால் அப்பொழுது இவர்கள் பெரிய அந்தஸ்துடன் இருந்ததால் அந்த ஒரு நடிகரை இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அதனால் இந்த நடிகருக்கு இவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்த நடிகர் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

அவர் வேறு யாருமில்லை நடிகர் விக்ரம் தான். அதாவது இவர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் வழி உறவினர்தான் விக்ரம். அந்த நேரத்தில் இவரும் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று பல படங்களில் நடித்து தோல்வியை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். ஆனால் இவருக்கு எந்த ஒரு விதத்திலும் கை கொடுக்காமல் உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன் பின்னரே விக்ரம் தனியாக அடி மேல் அடிபட்டு ஜெயித்து தற்போது ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். இதை தான் சொல்வார்கள் திருப்பி அடிக்கும் கர்மா என்று. அப்பொழுது என்னதான் ரசிகர்களை தன்வசம் வைத்துக் கொண்டு ஜொலித்து வந்தாலும் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் சினிமாவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் பிரசாந்த்.

Also read: இப்பவும் 900 தியேட்டர்களில் வெற்றியை கொண்டாடும் ஜெயிலர்.. ஆன விக்ரம் படம் ஓட அருண் விஜய்க்கு ஆடர் போட்ட கமல்

Continue Reading
To Top