மாஸ்டர் பிரபுதேவாவிற்கே டஃப் கொடுத்த பிரசாந்த்.. நடனத்தில் அசத்திய 5 படங்கள்

டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர். 90 காலகட்டத்தில் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இன்றுவரை பிரஷாந்தின் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்கும்,நடனம்,ஆக்ஷன் காட்சிகளுக்கும் ரசிகர்கள் அதிகம் எனலாம்.

இதனிடையே 90 காலகட்டத்தில் நடிகர் பிரபுதேவாவின் நடனம் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் பேசப்பட்டதோ அதற்கும் மேலாக பிரஷாந்தின் நடனம் பேசப்பட்டது. அப்படி பிரஷாந்த் நடிப்பில் வெளியான 5 திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

செம்பருத்தி: இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி திரைப்படத்தில் பிரசாந்த்,ரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில் பிரஷாந்தின் நடனம் இத்திரைப்படத்தின் பாடல்களை பார்ப்போருக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

செந்தமிழ் செல்வன்: இயக்குனர் மனோஜ் குமார் இயக்கத்தில் வெளியான செந்தமிழ்ச்செல்வன் திரைப்படத்தில் பிரஷாந்த்,மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜாவும்,எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும் இணைந்து இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இதனிடையே பிரஷாந்தின் வெஸ்டேர்ன் நடனம் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாட்டிற்கும் கச்சிதமாக பொருந்தி இருக்கும்.

வண்ண வண்ண பூக்கள்: இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் பிரஷாந்த்,வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டான நிலையில் வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரசாந்தின் குத்தாட்டம் இன்றுவரை ரசிகர்களுக்கு பிரியமானது:

கல்லூரி வாசல் : இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் பிரசாந்த்,அஜித்,தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல் திரைப்படத்தில் தேவா இசை அமைத்திருப்பார். இத்திரைப்படத்தில் பிரசாந்தின் டிஸ்கோ நடனம் ஆடி அசத்தி இருப்பார்:

ஜீன்ஸ்: 1998 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில், பிரசாந்த் இரு வேடத்தில் நடித்திருப்பார் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரஷாந்த், இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களிலும் புதுவிதமான நடனங்களை கையாண்டிருப்பார். பிரஷாந்தின் நடிப்பிற்காக சில ரசிகர்கள் இப்படத்தை பார்த்து வந்தாலும் ,அவர் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து ஆடிய நடனத்தை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் கூடியது எனலாம்.

- Advertisement -