பிரசாந்த் நடிப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர்.. திறமை இருந்தும் சாதிக்க முடியல

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செம்பருத்தி. ஆரம்பத்தில் இப்படத்தில் ராமன் கபூர், காயத்ரி, சுசித்ரா ஆகிய புதுமுகங்களுடன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், செல்வமணிக்கு திருப்தியாக இல்லை. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, படத்தின் புதிய நாயகனாக பிரசாந்த், கதாநாயகியாக ரோஜா மற்றும் பிரசாந்தின் பாட்டியாக பானுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். இப்படத்தில் பிரசாந்த், பானுமதி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தனர். பானுமதி நடிப்பில் பட்டையை கிளப்புவார். இதனால் பானுமதியின் பேரனாக பிரசாந்த் எப்படி நடிக்க போகிறார் என்று பயந்தார் ஆர்கே செல்வமணி. ஆனால் பிரசாந்த் படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.

செம்பருத்தி படம் வெளியான பின், நடிகர் பிரசாந்தின் கொடி உச்சத்தில் பறந்தது. இப்படத்தில் பிரசாந்த் அணிந்திருந்த டி – சர்ட் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. செம்பருத்தி படத்தில் வேலைக்கார பெண்ணை திருமணம் செய்யும் பணக்கார வீட்டு பையன் என்ற மிக சாதாரண கதை தான். ஆனால் நடிப்பு, இயக்கம் மற்றும் இசையால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனால் செம்பருத்தி படம் பிரசாந்த் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. அப்போது பிரபுதேவாவுக்கு இணையாக நல்ல நடனம் ஆடக் கூடிய நடிகராக பார்க்கப்பட்டார். அதன் பிறகு பிரசாந்த் எடுத்த எடுப்பிலேயே பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி இயக்குநர்களான பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் திரைப்படங்களின் நடித்தார்.

வைகாசி பொறந்தாச்சு, கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், வின்னர், ஜீன்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின்பு, பிரசாந்த் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்காமல் போனது. அத்துடன் அவர் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனால் திரைத்துறையில் அவருக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போனது. தற்போது பிரசாந்த் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்