ரெட் கார்டு கொடுத்தவர்களுக்கு நிச்சயதார்த்த சாப்பாடு போட்ட பிரதீப்.. இணையத்தை அலங்கரித்த புகைப்படங்கள்

Bigg Boss Pradeep Got Engaged: நாம் பிரபலமாக வேண்டும் என்றால் கம்முன்னு இருக்கும் இடம் தெரியாமல் இருந்தால் நிச்சயமாக நம்மளை யாருக்கும் தெரியாது. அதே நேரத்தில் நம்மளை சுற்றி பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வெடித்துக் கொண்டு வந்தால் குறுகிய நேரத்திலே நாம் அனைத்து இடங்களிலும் பேமஸ் ஆகி விடுவோம். அந்த மாதிரி தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் மீது வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதாவது ஒரு மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிரதீப் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் செய்த சதியால் பல சர்ச்சைகளில் சிக்கி ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டார்கள். ஆனால் இதனை அறிந்த மக்கள் எப்படி பிரதிப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாம். அவர் தான் எங்களுடைய ஃபேவரைட் போட்டியாளர். அவர் மீது எந்த தவறும் இல்லை என்று போர் கொடியை தூக்கினார்கள்.

குடும்பப் பொறுப்பை ஏற்ற பிக் பாஸ் பிரதீப்

ஆனால் இதை பெரிது படுத்தாமல் கமுக்கமான முறையில் விஜய் டிவி தரப்பில் இருந்து முடித்துக் கொண்டார்கள். ஆனாலும் வெளியே வந்த பிரதிப்புக்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் பொறுப்பான குடும்ப பொறுப்பை தலையில் சுமக்கும் ஒரு ஃபேமிலி மேனாக நுழையப் போகிறார்.

bb pradeep engaged
bb pradeep engaged

அந்த வகையில் நேற்று இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. அதை இணையதளத்தில் வெளியிட்டு எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. எனக்கெல்லாம் இதெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்ன நம்பியும் பொண்ண கொடுத்து இருக்கிறார்கள் என்று வெளியிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களையும், மணமகள் யார் என்றும் இணையத்தில் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

bb pradeep engaged (1)
bb pradeep engaged (1)

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து பிரதீப் வாழ்க்கையிலும் கேரியரிலும் அடுத்தடுத்து முன்னேற ஆசைப்படுகிறோம் என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அத்துடன் நிச்சயதார்த்தத்திற்கு பிக் பாஸ் போட்டியார்கள் அனைவரையும் கூப்பிட்டு சாப்பாடு போட்டு விருந்து வைத்திருக்கிறார். இதன்மூலம் எனக்கா ரெக்கார்டு கொடுத்திருக்கிறீர்கள் என்று கொடுத்தவர்களுக்கு சுருக்குன்னு குத்தும் படி தடபுடலான விருந்துகளை கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் பிரதீப் மீது போடப்பட்ட பழி

Next Story

- Advertisement -