நம்பிய லவ் டுடே பிரதீப் ரங்காவை கழுத்தை அறுத்த விக்னேஷ் சிவன்.. ஹீரோவை ஜீரோவாக்கிய நயன்தாரா புருஷர்

விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். அவர் தனக்குத்தானே மனதில் பெரிய செலிபிரிட்டி என நினைத்துக் கொண்டு பல வேண்டாத விஷயங்களை செய்து வருகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் எல்ஐசி படம் தான் இப்பொழுது பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்தப் படத்தின் கேமராமேன் ரவிவர்மா மற்றும் நீரவ் ஷா இருவரும் படத்திலிருந்து விலகி விட்டனர். விக்னேஷ் சிவன் நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கு பிடிக்காததால் விலகி உள்ளனர். மிகவும் அனுபவம் வாய்ந்த இவர்கள் விக்னேஷ் சிவனை “சார்” என்று கூப்பிட வேண்டுமாம். இதைப் போல் பல விஷயங்களில் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விலகி விட்டனர்.

இப்பொழுது இந்த படமே டிராப்பாகும் நிலைமையில் தான் இருக்கிறதாம். விக்னேஷ் சிவன் வழக்கத்துக்கு மாறாக பட வேலைகளை விட்டுவிட்டு ஹாங்காங்கில் சுற்றி வருவது தான் இதற்கு பெரிய எடுத்துக்காட்டு. முக்கால்வாசி படம் முடிந்த பிறகு இந்த படத்திற்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது.

ஹீரோவை ஜீரோவாக்கிய நயன்தாரா புருஷர்


ஏற்கனவே இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விலை போகவில்லை. படமும் ஓரளவு பெரிய பட்ஜெட் படம் தான். இதனால் படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பாளர் லலித் குமார் குறைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் இதை கேட்பதாக இல்லை.

இந்த பட்ஜெட்டில் வியாபாரமாகாத படம் எடுத்தால் நமக்கு நஷ்டம் தான் என லலித் யோசித்து வருகிறார். அதனால் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த படம் டிராப் ஆக வாய்ப்புள்ளது. லவ் டுடே என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு இப்பொழுது கேரியரே கேள்விக்குறியாக்கும் பிரச்சனை வந்துள்ளது.

Next Story

- Advertisement -