பிரபு பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

கடந்த சில நாட்களாகவே திரையுலகில் அடுத்தடுத்த மரண செய்தி வெளிவந்து பலரையும் அதிர்ச்சியாக்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனரும், நடிகருமான கே விஸ்வநாத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்தார். இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் இன்று இயக்குனர் டி பி கஜேந்திரன் மரணம் அடைந்துள்ளார்.

68 வயதாகும் இவர் சில மாதங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் மரணம் அடைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. உதவி இயக்குனராக தன் பயணத்தை ஆரம்பித்த இவர் இதுவரை ஏராளமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

Also read: ரஜினி, பிரபு போல் மற்றொரு அண்ணன் தம்பி.. சினிமாவில் வெற்றிகரமான சகோதரர்கள்

1988 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையில் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் நடிகர் பிரபுவை வைத்து இவர் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றும் கூட ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக இருக்கிறது.

மேலும் இவர் ஒரு நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு விவேக் நடிப்பில் வெளிவந்த மகனே மருமகனே என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு இவர் திரைப்படங்களை இயக்காமல் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரபுவின் 5 படங்கள்.. கார்த்திக்-கவுண்டமணி காம்போவிற்கு கொடுத்த டஃப்

அந்த வகையில் இவர் கடந்த வருடம் யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் வெளிவந்த பன்னிக்குட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்திருந்த இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய மரணத்திற்கு திரையுலகில் நடிகர், நடிகைகள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக வரும் மரண செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் டிபி கஜேந்திரனின் மரணமும் சொல்ல முடியாத வேதனையை கொடுத்துள்ளது.

Also read: கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் உள்ள உறவு.. ஆனந்த கண்ணீர் விட்ட பிரபு!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்