வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரபுவின் 5 படங்கள்.. கார்த்திக்-கவுண்டமணி காம்போவிற்கு கொடுத்த டஃப்

தென்னிந்திய சினிமாவில் 80, 90ஸ் டிம்பிள் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரபு. இன்றைய காலகட்டத்திலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள் அதுவும் கார்த்திக்-கவுண்டமணி காமினேஷனுக்கு டஃப் கொடுத்திருக்கிறார்.

அரங்கேற்ற வேளை: 1990 ஆம் ஆண்டு பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் பிரபு, ரேவதி, பிகே ராமசாமி, ஜனகராஜ் டெல்லிகணேஷ், சுகுமாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபு சிவராமகிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்திலும் ரேவதி ஆஷா எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் பிரபு எனது நகைச்சுவையை அள்ளித் தெளித்து இருப்பார். இப்படத்தில் வரும் “ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ” பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

Aso Read: நாங்க ரஜினி, கமல் கிடையாது.. பிரபு, சத்யராஜ் வருடத்திற்கு 10 படங்கள் வெளியிடுவதன் ரகசியம்

மை டியர் மார்த்தாண்டம்: 1990 ஆம் ஆண்டில் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம். இதில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் “கம்மிங் டு அமெரிக்கா” என்னும் ஆங்கில திரைப்படத்தின் ரீமேக் ஆகும் . மை டியர் மார்த்தாண்டம் படத்தில் நடிகர் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

பிரபு மார்த்தாண்டன் என்னும் கதாபாத்திரத்தில் ராஜாவாக நடித்திருப்பார். பணத்தின் மதிப்பு தெரியாத பிரபுவிடம் கவுண்டமணி ஏமாற்றி பணத்தினை பெறுகிறார். இந்த படத்தில் தான் கவுண்டமணியுடன் பிரபு அடித்திருக்கும் லூட்டி கார்த்திக்-கவுண்டமணி காம்போக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்தது

சின்ன மாப்பிள்ளே: 1993 ஆம் ஆண்டு இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் டி சிவா தயாரிப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதில் பிரபு, விசு, ராதாரவி, சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் பிரபு தங்கவேல் என்னும் கதாபாத்திரத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தரகரின் பேச்சைக் கேட்டு பணக்கார வேடமிட்டு மிராசுவின் மகளை கல்யாணம் செய்கிறார். பின்னர் உண்மையான தோற்றத்தை மறைத்து பொய் சொல்கிறார். அதனால் ஏற்படும் குழப்பங்களையும் விளைவுகளையும் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

Aso Read: கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் உள்ள உறவு.. ஆனந்த கண்ணீர் விட்ட பிரபு!

மிஸ்டர் மெட்ராஸ்: 1995 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம். இதில் பிரபு, சுகன்யா, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் பிரபு உடன் கவுண்டமணி மனோரமா அடிக்கும் லூட்டி அல்டிமேட் ஆக இருக்கும் .

தேடினேன் வந்தது: 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி வர்மா இயக்கத்தில் இசையமைப்பாளர் சிற்பி இசையமைப்பில் வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் பிரபு, கவுண்டமணி, மந்த்ரா, அம்ருதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் பிரபுவும் கவுண்டமணியும் வயதான தோற்றத்தில் தோன்றி அடிக்கும் லூட்டியில் படம் முழுவதும் முழு நீள நகைச்சுவை திரைப்படமாகவே அமைந்துள்ளது. இதில் பிரபுவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் கவுண்டமணியின் நடிப்பானது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

Aso Read: வைராக்கியத்துடன் சாதித்துக் காட்டிய இரண்டு ஹீரோக்கள்.. செட்டே ஆகாது என்று ஒதுங்கிய கார்த்திக், பிரபு

இவ்வாறு இந்த 5 படங்களும் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல்  பிரபு-கவுண்டமணி காமினேஷனில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்