புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கிள்ளுக்கீரையான பிரபுதேவா.. பேச்சுக்களை மூட்டை கட்டி தயாரிப்பாளருக்கு கொடுத்த பெத்த லாபம்

இவரையா வைத்து படம் பண்ணுகிறீர்கள், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் லாபத்தை பெற்று தராது. தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்படும் என்றெல்லாம் நடிகர் பிரபுதேவாவை பற்றி ஒரு பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் இப்போது தன்னை பற்றி பேசியவர்களை எல்லாம் வாயடைக்க செய்யும் அளவிற்கு ஒரு அற்புதத்தை நடத்தி இருக்கிறார். பொதுவாக பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஆவரேஜ் லிஸ்டில் தான் இருக்கும். இப்போது அந்த மாதிரி ஒரு ஆவரேஜ் படம் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது.

பிரபுதேவா சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மை டியர் பூதம். ராகவன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து ரம்யா நம்பீசன், குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அஸ்வந்த் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார்.

இவர்களின் கூட்டணியில் உருவான மை டியர் பூதம் படத்தின் மொத்த பட்ஜெட் 7 கோடி தானாம். ஆனால் இந்த படத்தின் டிஜிட்டல் சாட்டிலைட் உரிமையை பத்து கோடிக்கு ஒரு பிரபல நிறுவனம் வாங்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் நான்கு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தயாரிப்பாளர் இந்த படத்தை 14 கோடிக்கு விற்று வியாபாரம் செய்து விட்டார். அந்த வகையில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இது படகுழுவினரை தற்போது மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இப்படத்தில் நிறைய கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறதாம்.

இதனால் குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்கும் அளவுக்கு இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் படத்திற்கும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் பிரபுதேவா தன்னை கிள்ளு கீரையாக நினைத்து பேசியவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் ஒரு மிகப்பெரிய லாபத்தை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

Trending News