முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கும் கோலி சோடா பட பிரபலம்.. பட பூஜையில் பங்கேற்ற மாநாடு தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வரும் பிரபுதேவாவின் உதவியாளர் கலைமாமணி புதிதாக படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து வரும் முன்னனி நிறுவனமான JKவின் JFL புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் நாயகனாக பசங்க, கோலி சோடா போன்ற படங்களில் நடித்த ஸ்ரீராம் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனான்டாள் பிலிம்ஸ்முரளி, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் பங்கேற்றனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தை தயாரித்துள்ளார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. மேலும் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தீபாவளியன்று படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புது பட பூஜையில் பங்கேற்றுள்ளது படத்திற்கான பிரமோஷன் அல்லது மாநாடு படத்தின் ட்ரெய்லருக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் டிரைலர் மட்டும் தான் இன்னும் வெளியாகவில்லை. எனவே விரைவில் ட்ரைலர் வெளியாக வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sriram-koli-soda
sriram-koli-soda

தீபாவளிக்கு நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை ஆகிய இரண்டு மிகப்பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அதே நாளில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படத்தையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு போட்டிகள் அதிகரித்துள்ளது. இரண்டு பெரிய நடிகர்களுடன் மோத சிம்பு முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்