ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரபு மீது கேஸ் போட்ட ரத்த சொந்தங்கள்.. கடைசியில் பாசத்தை விட சொத்து தான் முக்கியம் போல

தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சிவாஜி கணேசன் அவரது குடும்பமும் இன்றளவும் நல்ல பெயருடன் நல்லமுறையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் குழந்தைகளும் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு திஷ்டி வைத்தார் போல் பிரச்சினை உருவாகியுள்ளது.

சிவாஜிகணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருந்தார் அதன் இன்றைய மதிப்பு சுமார் 270 கோடியாகும். சிவாஜிகணேசன் மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அவர்கள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் பெற்றுவிட்டதாக சில சொத்துக்களை அவருடைய மகளின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் தன்னுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில், பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் தாய்வழி சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு வழங்கவில்லை எனவும் அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம் வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோல் கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் விற்று விட்டதாகவும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகை கூட தங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை எனும் தெரிவித்துள்ளனர்.

இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜிகணேசன் சொத்துக்கள் தங்களுக்கு உரிமை உள்ளதால் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கூறி கூறியுள்ளனர். இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன் விக்ரம் பிரபு மற்றும் ஆகியோரையும் எதிர்மனுதாரர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

Trending News