சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கையில் மாட்டிய அயலான்.. தீபாவளிக்காவது அறுவடை நடந்துருமா!

Ayalaan Movie: டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலிலை குவித்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் படு தோல்வியாக அமைந்தது. அதன் பின் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் படம் உலகம் முழுவதும் 80 கோடியை வாரிக் குவித்ததால் பெருமூச்சு விட்டார்.

ஆனால் சிவகார்த்திகேயன் முன்பே தயாராகி பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப் போய் கொண்டு இருக்கக் கூடிய படம் தான் அயலான். கிட்டத்தட்ட நான்கு வருட கிடப்பில் போடப்பட்டதன் பிறகு இப்போது அயலான் படம் ரிலீஸ் என்ற ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. அயலான் படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்து அறுவடை செய்து விடலாம் என்று பட குழு திட்டமிட்டுள்ளனர்.

Also Read: காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு.. எஸ்கே 21 ஷூட்டிங்கில் இணைந்த கதாநாயகி

அதனால் ரிலீசுக்கு முன்பு இந்த படத்துக்கு ஆடியோ லான்ச் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அக்டோபர் மாத இறுதியில் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

அயலான் படத்தின் ஆடியோ லான்ச் நல்லபடியாக ஒரு சக்சஸ்ஃபுல்லாக போக வேண்டும் என்றால் நிச்சயமாக படத்தின் இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமான் துணை வேண்டும். இப்பொழுது அவர் டேட் கிடைக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.  ஏஆர் ரகுமான் எப்படியாவது எதையாவது பண்ணி இந்த ஆடியோ லாஞ்சை ஹிட் ஆக்கி விடுவார், அதனால் அவர் தயவு அயலான் படத்திற்கு வேண்டும்.

Also Read: மனைவிக்கு வித்தியாசமாக திருமண வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கியூட் போஸ்ட்

இப்பொழுது சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கையில் தான் எல்லாமே இருக்கிறது என்பது போல் ஏ ஆர் ரகுமானின் டேட்டுக்காக அல்லோல பட்டு வருகின்றனர். ஆனால் ஏஆர் ரகுமான் இந்திய அளவில் பேமஸான இசையமைப்பாளர் என்பதால் தமிழில் மட்டுமல்லாமல் பிறமொழி படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு பிஸியாக இருக்கும் இசைப்புயலை எப்படி அயலான் பட ஆடியோ லான்ச்சுக்கு வர வைப்பது என்று தெரியாமல் சிவகார்த்திகேயன் திணறுகிறார். இதே நிலை நீடித்தால் அயலான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுவது சந்தேகம் தான்.

Also Read: அப்பாவை பழிவாங்க விபரீத முடிவை எடுத்த வனிதா.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவர்தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்