டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

வெள்ளி திரைக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை போலவே சின்னத்திரையில் அனுதினம் பார்க்கும் சீரியலுக்கு என்று தனி கூட்டம் உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியல் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். இதில் எப்போதுமே முன்னிலை வைக்கும் சீரியல்கள் சில, பின்னுக்கு தள்ளப்பட்டதுடன் சன் டிவி சீரியல்கள் இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டியுள்ளது.

இதில் 10-வது இடத்தில் ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் இனியாவின் அக்காவான யாழினிக்கு இனியாவுடன் ஒரே கம்பெனியில் பணிபுரியும் இளங்கோ தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் இனியாவின் மூலமாகவே இதனை செய்துள்ளார். இந்த தகவல் இளங்கோவனின் அண்ணனுக்கு தெரிய வர இதனைக் கொண்டு இனியாவை எவ்வாறு பழி வாங்கலாம் என்று சதி திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது போல் கதையானது நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இனியா சீரியல் ஆனது 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

எதிர்நீச்சல்: இதில் தர்ஷனின் செயல்களால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி ஒரு கட்டத்தில் தனது சுயமரியாதையை வெளிக்காட்டி உள்ளார் . இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.அப்பத்தாவின் செயலின் மூலம் குடும்பத்தில் பூகம்பம வெடிக்க போகிறது என்பதைப் போல கதைக்களமானது நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக அப்பத்தா காணாமல் போனதற்கு குணசேகரன் தான் காரணம் என்று ஜனனி போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்ததற்கு ஜனனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கதிர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியலானது 5-வது இடத்தை பிடித்துள்ளது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீரா தனது அப்பாவை நிரபராதி என்று சிறையிலிருந்து வெளியே எடுத்து இருக்கிறார். மீரா தனது அப்பாவிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தரும் பொருட்டு தான் கர்ப்பமாக இருப்பதை முதலில் தன் தந்தையிடம் தெரிவிக்கிறார். தற்பொழுது அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல இருப்பது போல் கதைக்களம் ஆனது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கண்ணான கண்ணே சீரியல் ஆனது 4-வது இடத்தில் உள்ளது.

வானத்தைப்போல: இதில் துளசியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆசையாக சென்ற சின்ராஸிற்கு விபத்து ஏற்பட்ட தற்பொழுது மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோமா நிலையில் உள்ள தனது அண்ணனை மீட்டெடுப்பதற்காக துளசி தெய்வத்திடம் வேண்டி கார்த்திகை தீபம் எடுக்க உள்ளார். இதில் தனது பகையை தீர்த்துக் கொள்ள பூர்ணிமா தனது திட்டத்தை தீட்டிக்கொண்டு உள்ளது போல் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் வானத்தைப்போல சீரியல் 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

சுந்தரி: இதில் முருகன் அவர்கள் ஜெயிலில் இருப்பது குடும்பத்தினருக்கு தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுவிற்காக தான் ஜெயிலில் இருக்கிறார் என்பது தெரிந்த உடன் லட்சுமி மிகவும் கோபப்படுகிறார். இது ஒரு புறம் இருக்க அனுவிற்கு சுந்தரியின் மீது கோபம் ஏற்படுகிறது. இதில் மிகப்பெரிய டுவிஸ்ட் ஆக அணு செய்த கொலைக்காக முருகன் சிறையில் உள்ளார். ஆனால் அந்த கொலையை அணுசெய்யவில்லை மாறாக அருண்தான் குறிபார்த்து பழனியை சுட்டுள்ளார். உண்மை எப்பொழுது தெரியவரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சுந்தரி சீரியல் 2-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கயல்: இந்த சீரியலில் கயல் தனது தங்கச்சியின் வாழ்க்கைக்காக மிகவும் கடினமான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். மூர்த்தி செய்த தவறினால் தற்பொழுது தேவியின் வாழ்க்கை ஆனது கேள்விக்குறியில் உள்ளது. விக்னேஷ் வெளியூர் சென்று இருக்கும் நிலையில் வேதவல்லி தேவியினை பல்வேறு முறையில் வரதட்சணை கொடுமை செய்து கொண்டிருக்கிறார். இது கயலுக்குத் தெரிய வர வேதவல்லிடம் கயல் சவால் விட்டிருக்கிறார். ஒரு இரவுக்குள் 30 பவுன் நகையை எவ்வாறு கயல் கொடுக்கப் போகிறார் என்பதை மையமாகக் கொண்டு இக்கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

இவ்வாறு இந்த வருட டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களை சன் டிவியின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்து விஜய் டிவியின் சீரியல்களை துரத்தி அடித்திருக்கிறது. அதிலும் துவங்கப்பட்ட சில நாட்களை யான இனியா சீரியல் டாப் 6 இடத்தையும், கடந்த சில மாதங்களிலேயே டாப் 5 இடத்தைப் பிடித்த எதிர்நீச்சல் சீரியலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் ஆக மாறி கொண்டுடிருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை