தவளை தன் வாயால் கெடும்.. கங்கனாவுக்கு முன் சந்திரமுகி வாய்ப்பை இழந்த நடன சூறாவளி

Kangana Ranaut: சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சந்திரமுகி தற்போது இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கிறது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சந்திரமுகி கேரக்டரில் கங்கனாவுக்கு முன் யார் நடிக்க இருந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்திரமுகியால் பாதிக்கப்படுபவராக ஜோதிகா மிரட்டி இருப்பார். கண்ணை உருட்டிக்கொண்டு அவர் நடித்த நடிப்பு இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

Also read: சாய் பல்லவி காதல் கருமத்தை செய்யாமல் இருக்க இவர் தான் காரணம்.. தவறாகப் பேசிய 2 ஹீரோக்கள்

அது மட்டுமல்லாமல் ஜோதிகாவுக்கு அந்த கேரக்டர் இன்றுவரை பெயர் சொல்லும் படியாக இருக்கிறது. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டது வேறு யாரும் கிடையாது நடன சூறாவளியான சாய்பல்லவி தான். அதற்கான காரணம் தான் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

அதாவது முதலில் இந்த கதாபாத்திரத்தை பற்றி சாய்பல்லவியிடம் தான் பி. வாசு விளக்கமாக கூறியிருக்கிறார். கதையைக் கேட்டு விட்டு உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்ட சாய்பல்லவி கிளைமாக்ஸ் காட்சியில் சிறு மாறுதல்களை சொல்லி இருக்கிறார்.

Also read: ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

இது இயக்குனருக்கு கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது. நடிக்க கூப்பிட்டால் டைரக்சன் வேலையையும் சேர்த்து பார்ப்பீர்களோ என்று கடுப்பான பி வாசு, சாய் பல்லவியை ரிஜெக்ட் செய்திருக்கிறார். அதன் பிறகு தான் கங்கனா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு தவளை தன் வாயால் கெடும் என்பது போல் வீடு தேடி வந்த வாய்ப்பை சாய் பல்லவி தவற விட்டிருக்கிறார். ஒரு வேலை அவர் மட்டும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நிச்சயம் வேறு மாதிரி வரவேற்பு கிடைத்திருக்கும். இருப்பினும் கங்கனா ஜோதிகாவின் நடிப்பை ஓரம் கட்டி சந்திரமுகியாக நிலைத்து நிற்பாரா என்பதை படம் ரிலீஸ் ஆனவுடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Also read: 17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Next Story

- Advertisement -