தமிழ் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் சினிமா துறையில் அவருக்கென்று ஒரு மரியாதையும் இருக்கிறது. அப்படிப்பட்டவரை ஒரு நடிகை அவமானப்படுத்தினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.
கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 70 கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கு காணலாம். சிவாஜி கணேசன் பல திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அவர் சிவகாமியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வாணிஸ்ரீ, லதா உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருந்தார். குறிப்பிட்ட தேதியில் அந்த பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவர் காலதாமதமாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்.
அதற்கு காரணம் அவர் ஊட்டியில் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தது தான். சரியான நேரத்தில் ரயிலை பிடிக்காமல் தவறவிட்ட அவர் அதன் பிறகு வாடகை கார் மூலம் எப்படியோ சூட்டிங் பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இது குறித்து முன்னரே அவர் படக்குழுவினருக்கு தகவலும் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவரை மன்னிப்பு கேட்கும் படி பட குழுவினர் வற்புறுத்தி இருக்கின்றனர். அதாவது அவர் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்ததால் சிவாஜி மிகவும் கோபமாக இருந்திருக்கிறார். அதனால் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பட குழுவினர் அனைவரும் அவரிடம் கூறியிருக்கின்றனர்.
ஆனால் அவரோ நான் தாமதமான காரணத்தை முன்பே சிவாஜி சாரிடம் தெரிவித்துவிட்டேன். அப்படி இருக்கும்போது எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பில் இருப்பவர்கள் மன்னிப்பு கேட்க விட்டால் நீங்கள் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக சொல்லி இருக்கிறார்கள்.
இதனால் வெண்ணிற ஆடை நிர்மலா நான் தப்பு செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமென்றால் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் சிவாஜியை அவமானப்படுத்தி விட்டதாக ஒரு செய்தி அப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் பட வாய்ப்புக்காக பணிந்து போகாமல் சுயமரியாதையுடன் அந்த படத்தில் இருந்து வெளியேறிய வெண்ணிற ஆடை நிர்மலாவின் அந்த செயல் பலரும் பாராட்டும் வகையில் இருக்கிறது.