அடுத்த தல இந்த நடிகர் தான்.. அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல இயக்குனர்

ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என ஏற்கனவே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தல யார்? என்ற போட்டியும் தொடங்கி விட்டது போல.

நாளுக்கு நாள் பட புரமோஷனுக்காக இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இஷ்டத்திற்கு பில்டப் செய்வதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லையே. அனைத்து ரசிகர்களையும் தங்கள் படத்தைப் பார்க்க இழுக்க வேண்டும் அல்லவா.

அந்த வகையில் அடுத்ததாக ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள திரைப்படம் பூமி. ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமும்கூட.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பூமி படத்தின் விளம்பரங்கள் இருப்பதாக தெரியவில்லை. இதனால் ஏற்கனவே படக்குழுவினர் அப்செட் ஆகியுள்ளனர். இருந்தாலும் படத்தின் இயக்குனர் லட்சுமண் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அடுத்த தல நம்ம ஜெயம் ரவிதான் என குறிப்பிட்டுள்ளார். பட புரமோஷனுக்காக எதை வேண்டுமானாலும் பேசி விடுவது என தல ரசிகர்கள் கொந்தளித்தனர்.

bhoomi-cinemapettai
bhoomi-cinemapettai

லட்சுமன் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்