எனக்கு அந்த ஃபீலிங்ஸ் இருக்கு.. காதல் வலையை வீசிய பூர்ணிமா

BB7 Tamil Promo: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போனவாரம் இருந்த பரபரப்பு இந்த வாரம் சுத்தமாக இல்லை. கடந்த வாரம் முழுக்க சர்ச்சையும் சண்டையுமாக இருந்ததால் அதை பார்க்க விறுவிறுப்பாக இருந்தது. இந்த வாரம் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சிக் கொள்வதும், சமாதானம் செய்து கொள்வதும் பிக்பாஸுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது என்று தெரிகிறது.

இவர்கள் இப்படி அன்பை பொழிந்து கொண்டால் முதலுக்கே மோசம் ஆகி விடும் என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் ரோல் பிளே டாஸ்கை கொடுத்து இருக்கிறார். நம்மை போல இன்னொருவர் நடிக்கிறார் என்று முகத்திற்கு முன்னாடி சந்தோஷப்பட்டாலும், கோபத்தில் பொசுங்குவது அவர்களின் முகத்தை நன்றாக பார்த்தாலே தெரிகிறது.

தினேஷுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்கில் வசமாக சிக்கியது விஷ்ணு தான். விஷ்ணு, தினேஷை பார்த்து நரி என்று சொல்ல, தினேஷ் அமுல் பேபி என்று விஷ்ணுவை வச்சு செய்தார். ஒரு கட்டத்தில் விஷ்ணுவை இன்னும் அதிகமாக தூண்டி விட நினைத்த தினேஷ் ப்ரோமோ பொறிக்கி என்னும் வார்த்தையை சொன்னார். இதுதான் வாய்ப்பு என இன்றைய டாஸ்கில் தினேஷ் சொன்ன ப்ரோமோ பொறுக்கி வார்த்தையை ஒரு நூறு தடவைக்கு மேல் பூர்ணிமா உபயோகித்து விட்டார்.

Also Read:இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

தினேஷ் மற்றும் விஷ்ணுவை தூண்டிவிட தான் பூர்ணிமா இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினார். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமாவில் பூர்ணிமாவின் திட்டம் தெரியாமல் விஷ்ணு அந்த வார்த்தை தன்னை எவ்வளவு காயப்படுத்தியது என்று பூர்ணிமாவிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார். பூர்ணிமாவும் இதுதான் வாய்ப்பு என காதல் வலையை வீசுகிறார்.

நீங்கள் இப்படி இருப்பது தான் விஷ்ணு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று பூர்ணிமா சொல்கிறார். மேலும் தனக்கு மனதில் ஏதோ ஒரு ஃபீலிங் இருப்பதாகவும், நான் நினைப்பது உண்மை தானா என்றும் பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்கிறார். பிக் பாஸ் இந்த வீடியோவுக்கு பின்னணியில் போடும் இசை, கண்டிப்பாக இது ஒரு காதல் கன்டென்ட் என்பதை உறுதி செய்து இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீசனில் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு காதல் கண்டன்டு இருக்கிறது. இனி பூர்ணிமா மற்றும் விஷ்ணுவின் காதல் எல்லாம் பார்க்கும் அளவுக்கு யாருக்கும் தைரியம் கிடையாது. ஆக்ஷன் கன்டன்ட்டை மட்டுமே எதிர்பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இந்த ப்ரோமோ.

Also Read:பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ