
Passed Away Poonam Pandey: நடிகை மற்றும் மாடல் அழகியன பூனம் பாண்டே இன்று காலை இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் மூலம் அவருடைய அக்கவுண்டில் பதிவிட்டு இருக்கிறார்கள். அதாவது இன்று காலை எங்களுக்கு மிகவும் கவலையான ஒரு விஷயம் என்னவென்றால் எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பிரச்சினையால் இறந்துவிட்டார் என்பதே ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
32 வயதான இவருக்கு கர்ப்பப்பை வாய்வில் புற்றுநோய் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவர் இரண்டு நாட்களுக்கு முன் கோவாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். பின்பு இவருக்கு ஏற்பட்ட வலியால் எதிர்பாராத விதமாக இன்று இவருடைய உயிர் பிரிந்து விட்டது.
பூனம் பாண்டே லவ் இஸ் பாய்சன், மாலினி & கோ போன்ற கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார் . அமித் சக்சேனாவின் 2013 திரைப்படம் நாஷா பாலிவுட்டில் பூனம் பாண்டேயின் அறிமுகம் பெற்றிருக்கிறார். திரைப்படங்களை தவிர, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். மேலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான லாக் அப் சீசன் 1 இல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கினர்.
2011 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றார். இந்திய அணிக்காக ஆடைகளை அணிவிப்பேன் என்று சபதம் செய்தபோது அனைவரிடமும் சர்ச்சையை வெடித்ததால் அதன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். அத்துடன் நடிப்பையும் தவிர இவருடைய தைரியமான மற்றும் துணிச்சலான பல விஷயங்களையும் தொடர்ந்து செய்து வந்தார். அப்படிப்பட்ட இவருடைய இறப்பு பலருக்கும் மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது. இவருடைய ஆத்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
இன்ஸ்ட்டா-வில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Also read: தமிழில் இந்த நடிகருடன்தான் நடிப்பேன்.. தலைவி பட பிரஸ் மீட்டில் சொன்ன கங்கனா ரனாவத்