சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட பூஜா ஹெக்டே.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

விஜய் நடித்த பீதமிழ் சினிமாஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக வலம் வந்த பூஜா ஹெக்டே, துல்கர் சல்மானுடன் நடிக்காமல் போனதற்காக மிகவும் கவலையாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதை தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் இதனிடையே நடிகர் பிரபாசுடன் ஜோடி சேர்ந்து நடித்த ராதேஷ்யாம், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் தெலுங்கில் இயற்றப்பட்டு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. பல நாட்கள் கழித்து காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீதாராமம் திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வெற்றியைப் பெற்று வருகிறது.

இதனிடையே இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, மிரினல் தாக்கூர், துல்கர் சல்மான்,பிரகாஷ் ராஜ், பூமிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார், இதுவே இவரது முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

ராணுவத்தில் பணிபுரியும் துல்கர் சல்மான் கடிதத்தின் மூலமாக நாயகியை காதலித்து வரும் நிலையில், இருவரும் கடைசியில் சேர்வார்களா என்பதே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் முதன் முறையாக நடிகை மிரினல் தாக்கூரின் கதாபாத்திரத்துக்கு பூஜா ஹெக்டே தேர்வாகி இருந்தார்.

ஆனால் அப்போது பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், இத்திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் தற்போது சீதாராமம் திரைப்படம் வெற்றியடைந்து வருவதையொட்டி, நாம் நடிக்காமல் போய்விட்டோமே என பூஜா ஹெக்டே கவலையில் உறைந்து உள்ளாராம்.

Next Story

- Advertisement -